செவ்வாய், 18 நவம்பர், 2025

திருச்செந்தூர் தொகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைப்பு

photo news by Arunan journalistt 

தூத்துக்குடி, நவம்பர் 18:

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் இன்று அதிமுகவில் இணைந்தனர்.

மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் ஆர் எம் கே எஸ் சுந்தர் ஏற்பாட்டில் இளைஞர் இளம் பெண்கள் பாசறை இனை செயலாளர் நடைபெற்ற இந்நிகழ்வில், முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான எஸ்.பி. சண்முகநாதன் முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் சேர்ந்தனர்.



இன்று மதியம் 1 மணி அளவில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், வானவேடிக்கை கொளுத்தப்பட்டு மேளம் முழங்க கொண்டாட்டங்கள் நடைபெற்றன.



இந்நிகழ்வில் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அணிகளைச் சேர்ந்த தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்: தூத்துக்குடி லீக்ஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக