வியாழன், 16 அக்டோபர், 2025

தூத்துக்குடியில் எம்ஜிஆர் சிலைக்கு முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மாலை அணிவிப்பு அதிமுக நிறுவுனர் தினம் பட்டாசு வெடித்து இனிப்பு லட்டு வழங்கி கொண்டாட்டம்

 தூத்துக்குடி லீக்ஸ்

தூத்துக்குடி: அக் 17

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.இ.அ.தி.மு.க.) கட்சியின் 54-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு தூத்துக்குடியில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

thoothukudileaks


1972 ஆம் ஆண்டு எம்ஜிஆர் அவர்கள் அண்ணா உருவம் பொறித்த கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தி, அடுத்தடுத்த தேர்தல்களில் வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றார். அவர் மறைவுக்கு பிறகு புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களும் எம்ஜிஆர் வழியில் கட்சியை ராணுவ ஒழுக்கத்துடன் வழிநடத்தி தமிழக அரசை சிறப்பாக நடத்தினார். தற்போது மூன்றாம் தலைமுறை தலைவராக எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் அதிமுக பொதுச் செயலாளராக கட்சியை முன்னெடுத்து வருகிறார்.

thoothukudileaks

thoothukudileaks


அவரது உத்தரவின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் மாநில வர்த்தகஅணி செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சரான சி.த. செல்லப்பாண்டியன் தலைமையில், டூவிபுரத்தில் அலங்கரிக்கப்பட்ட எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது.

பின்னர், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் தமிழகத்தில் நல்லாட்சி அமைப்போம் என்ற உறுதிமொழி எடுக்கப்பட்டது.

thoothukudileaks

thoothukudileaks


நிகழ்ச்சியில் மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் மில்லை ராஜா, தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் சந்தனம், தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் சேகர், எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் ஜோதிமணி, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், மொத்த கூட்டுறவு பண்டகசாலை தலைவர் எட்வின்பாண்டியன், முன்னாள் நகர்மன்ற தலைவர் மனோஜ்குமார், துணைத்தலைவர் ரத்தினம், மாவட்ட மகளிரணி துணைச் செயலாளர் சண்முகத்தாய், ஜோசப், சங்கர், அபுதாகீர், கோட்டளமுத்து, ராஜசேகர், டெலஸ்பர், மாரியப்பன், சந்திரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

🗞️ தூத்துக்குடி லீக்ஸ் - உங்கள் மாவட்ட செய்தி, உங்கள் குரல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக