தூத்துக்குடி லீக்ஸ்
அஇஅதிமுக 54வது ஆண்டு துவக்க விழா – தூத்துக்குடியில் செலுத்தப்பட்டது
தூத்துக்குடி,
(17.10.2025):
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 54வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, கழக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், வருங்கால முதலமைச்சர் புரட்சித் தமிழர் மாண்புமிகு எடப்பாடி கே. பழனிசாமி ஆணைக்கிணங்க இன்று காலை 10.30 மணிக்கு தூத்துக்குடி பழைய முனிசிபல் அலுவலக வளாகத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். திருவுருவச்சிலைக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்வில் அதிமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டு, கழகத்தின் அடிப்படை கொள்கைகளை வலியுறுத்தியும், அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர்.ஜெயலலிதா அவரது வழியில் தமிழ்நாடு முன்னேறி செல்ல வேண்டுமென உறுதியெடுத்தும் பேசினர்.
(தூத்துக்குடி லீக்ஸ் செய்தியாளர்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக