தூத்துக்குடி, அக்.29 -
திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவில் சிறப்பு அனுமதி வாகன பாஸ் கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்பட்டதாக ஒரு பிரபல செய்தித்தாளில் வெளியான செய்திக்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
காவல்துறை மறுப்பு !!!
மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள விளக்கத்தில், இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு சூரசம்ஹார நிகழ்வு நாளன்று மட்டும் பயன்படுத்தும் சிறப்பு அனுமதி வாகன பாஸ் யாருக்கும் வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு அனுமதி பாஸ் ரத்து உத்தரவை தொடர்ந்து, திருச்செந்தூர் ஐடியல் வாகன நிறுத்தம் மற்றும் வனப்பார்வதி ஆகிய வாகன நிறுத்துமிடங்களில் எந்த ஒரு வாகனமும் நிறுத்தப்படவில்லை என்று காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது.
விடுதி பயனர்களுக்கு மட்டும் அனுமதி
சூரசம்ஹார விழாவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர் TB சாலையில் உள்ள 70ற்கும் மேற்பட்ட தனியார் விடுதிகளில் முன்னதாகவே புக்கிங் செய்த பயனர்களுக்கு மட்டும் குறைந்த அளவே லாட்ஜ் பாஸ் வழங்கப்பட்டது. இது பக்தர்கள் தங்கள் உடைமைகளை எடுத்துச் செல்வதற்கும், தூரத்தில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் இருந்து விடுதி வரை செல்லும் சிரமத்தை தவிர்க்கவுமே வழங்கப்பட்டது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி
கோயில் பராமரிப்பு பணி, மின் ஊழியர்கள் பணி, பால், மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு சிறப்பு பாஸ் அல்லாமல் சாதாரண அனுமதி பாஸ் மட்டுமே வழங்கப்பட்டதாகவும், இது ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
விடுதி முன்போ வேறு எந்த இடத்திலோ அனுமதி இன்றி தனியார் வாகனங்கள் நின்றால் காவல்துறையினர் உடனடியாக அதனை அப்புறப்படுத்தி நடவடிக்கை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறைக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் என்றும் மாவட்ட காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
24X7 உதவி எண்: 9514144100

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக