சனி, 25 அக்டோபர், 2025

அஞ்சல் வழி பிரச்சாரத்தில் அமைச்சர் கீதாஜீவன்

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ்செய்திகள் 

பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த திட்டத்தின் பயனாளிகளை குறிவைத்து, தூத்துக்குடி மாநகர திமுக பெயரில் இந்த தபால்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி:அக்26

தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல்–மே மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் சூடு ஏற்கனவே ஏற்றுக் கொண்டுள்ளது. அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், தற்போதைய எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதிகளை தக்கவைத்துக் கொள்ள பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.



அந்த வகையில், தூத்துக்குடி தொகுதி எம்எல்ஏவும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் சார்பில் வாக்காளர்களை, குறிப்பாக பெண்களை கவரும் வகையில் வீடுகள்தோறும் தபால் மூலம் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த தேர்தலில் திமுகவின் முக்கிய பிரச்சார கருவியாக ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டம் திகழும் எனக் கூறப்படுகிறது.


அஞ்சல் வழி பிரச்சாரத்தில் அமைச்சர் கீதாஜீவன்

 பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த திட்டத்தின் பயனாளிகளை குறிவைத்து, தூத்துக்குடி மாநகர திமுக பெயரில் இந்த தபால்கள் அனுப்பப்பட்டுள்ளன.

தூத்துக்குடியில் பல குடும்பங்களுக்கு சென்றடைந்த அந்த தபாலில்,
“எல்லாருக்கும் எல்லாம் என்ற கொள்கையுடன் திராவிட மாடல் ஆட்சியை முன்னெடுத்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்கள் நலத் திட்டங்களால் தமிழ்நாட்டை இந்தியாவில் முன்னிலை மாநிலமாக மாற்றியுள்ளார்.
குறிப்பாக, ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தின் மூலம் பெண்களின் வாழ்வில் ஒளிவிளக்கேற்றப்பட்டுள்ளது. இதேபோன்று மேலும் பல திட்டங்களை செயல்படுத்தி நமது வாழ்வை மேம்படுத்த, வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பொற்கால ஆட்சியை தொடரச்செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்*” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தபால் தற்போது தூத்துக்குடி முழுவதும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி திமுகவின் இந்த “தபால் யுக்தி” வாக்காளர்களை எவ்வளவு அளவு கவரும் என்கிற ஆர்வம் நிலவினாலும், இந்த புதிய பிரச்சார முறை தேர்தல் பலனளிக்கும் என்ற நம்பிக்கை கட்சியினரிடையே நிலவுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக