தூத்துக்குடி லீக்ஸ்
📅 வியாழக்கிழமை, 23 அக்டோபர் 2025
📍 தூத்துக்குடி அக் 23
மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் – தூண்டில் வளைவை பூர்த்தி செய்யக் கோரி வலியுறுத்தல்
தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில், தூண்டில் வளைவை முழுமையாக பூர்த்தி செய்ய அரசுக்கு வலியுறுத்தும் விதமாக, இன்று (23.10.2025) காலை 11 மணியளவில் விவிடி சிக்னல் அருகே மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டம், தூத்துக்குடி வடபாகம் நாட்டுப்படகு பஞ்சாயத்து மற்றும் அனைத்து மீனவ மற்றும் சங்குகுளி சங்கங்களின் கூட்டமைப்பு – திரேஸ்புரம், தூத்துக்குடி ஆகியவற்றின் சார்பில் சிறப்பாக நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பெருமளவிலான மீனவர்கள் கலந்து கொண்டு, தூண்டில் வளைவு பணி நீண்டநாட்களாக நிறைவு பெறாததை குறித்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, தூண்டில் வளைவை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
போலீசார் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர்.
தூத்துக்குடி லீக்ஸ் – மக்கள் குரல், உண்மையின் ஒலி.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக