📰 தூத்துக்குடி லீக்ஸ்
தூத்துக்குடியில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு
தூத்துக்குடி, அக். 21 —
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21 அன்று, தங்கள் கடமையில் உயிர் தியாகம் செய்த காவல் துறை வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் காவலர் வீரவணக்க நாள் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்நாளை முன்னிட்டு நாடு முழுவதும் காவல் துறையின் சார்பில் அணிவகுப்பு நடைபெற்று, காவல் துறையில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்படுகிறது. மேலும், இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலியும் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த அனுசரிப்பு 1954 ஆம் ஆண்டு அக்டோபர் 21 அன்று உதவி ஆய்வாளர் கரம் சிங் தலைமையிலான மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) காவலர்கள் பத்து பேர் சீன ராணுவத்தினரால் தாக்கப்பட்டு லடாக் பகுதியில் (16,000 அடி உயரம்) உயிரிழந்த நிகழ்வை நினைவுகூர்வதற்காக ஆரம்பிக்கப்பட்டது.
அதன் நினைவாக ஆண்டுதோறும் அக்டோபர் 21 அன்று காவலர் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
இன்று (21.10.2025, செவ்வாய்க்கிழமை) காலை 7.45 மணிக்கு, தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் காவல் துறையில் வீரமரணம் அடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் “காவலர் வீரவணக்க நாள்” நிகழ்வு நடைபெற்றது.
தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான், இ.கா.ப. தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு துப்பாக்கி முழக்கத்துடன் மரியாதை செலுத்தப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக