👇
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் உழவர் சந்தை கடை வாசல் அமைப்பில் மாற்றம் கோரி வியாபாரிகள் கோரிக்கை
தூத்துக்குடி:அக் 16
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் வளாகத்திற்குள் அமைந்துள்ள உழவர் சந்தை நிர்வாகம் ஒரு புதிய கடையை கட்டி வாடகைக்கு விடும் நடவடிக்கையில் உள்ளது. இதற்கான ஏலம் இன்று( 16-10-2025) நடைபெறுகிறது.
எதிர்ப்பு!!!
ஆனால், அந்த கடையின் வாசல் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் உள்ளே நோக்கி அமைக்கப்பட்டுள்ளதால், மாநகராட்சியின் கீழ் ஏற்கனவே வாடகைக்கு கடைகள் எடுத்து வியாபாரம் செய்து வரும் வணிகர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
![]() |
உழவர் சந்தை புதிய கடை |
![]() |
ஏல அறிவிப்பு |
இதனைத் தொடர்ந்து, புதிய பேருந்து நிலைய வட்டார சிறுதொழில் மற்றும் வியாபாரிகள் ஐக்கிய சங்கம், மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்து, அந்த கடையின் வாசலை உழவர் சந்தை பக்கமாக மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தாழ்மையுடன் கோரிக்கை விடுத்துள்ளது.
வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் அவர்கள் கூறியதாவது:
“புதிய கடை வாசல் பேருந்து நிலையத்தை நோக்கி திறந்தால், உள்ளே உள்ள வியாபாரிகளின் வர்த்தகத்தில் குறைவு ஏற்படும். ஆகையால் வாசலை உழவர் சந்தை பக்கமாக மாற்றி அமைத்தால் அனைவருக்கும் சமநிலை கிடைக்கும்,” என்று தெரிவித்தனர்.
இந்த கோரிக்கைக்கு மாநகராட்சி நிர்வாகம் எவ்வாறு பதிலளிக்கிறது என்பது கவனிக்கப்படுகிறது.
– தூத்துக்குடி லீக்ஸ் செய்தியாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக