வியாழன், 16 அக்டோபர், 2025

வாட்ஸ்அப் ஹேக்கிங் மோசடிகள் அதிகரிப்பு – பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க மாவட்ட காவல்துறை அறிவுறுத்தல்

 👇Tamilnadu news update 

Photo news by Arunan journalist 


தூத்துக்குடி: அக் 16

சமூக வலைதளங்கள் மற்றும் மெசேஜிங் பயன்பாடுகள் மூலம் நடைபெறும் இணைய மோசடிகள் அதிகரித்துள்ள நிலையில், தற்போது வாட்ஸ்அப் ஹேக்கிங் மோசடிகள் பெருமளவில் நடைபெற்று வருவதாக மாவட்ட காவல்துறை பொதுமக்களை எச்சரித்துள்ளது.

வங்கிகள், அரசு அமைப்புகள், "Aadhaar Updates", "Traffic e-Challan Payment" போன்ற பெயர்களில் போலியான வாட்ஸ்அப் குழுக்களில் இருந்து மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். இக்குழுக்களில் உள்ள மோசடியாளர்கள் “Rewards”, “KYC updates”, “Cashback Offers” என்ற பெயரில் போலியான APK file அல்லது Link அனுப்புகின்றனர்.



அந்த லிங்கை கிளிக் செய்வது அல்லது அந்த கோப்பை பதிவிறக்கம் செய்வது மூலமாக மோசடியாளர்கள் மக்கள் செல்போன்களை ஹேக் செய்து, வாட்ஸ்அப் செய்திகள், வங்கி கணக்கு விவரங்கள், OTP மற்றும் தனிப்பட்ட தகவல்களை திருடுகின்றனர். மேலும், ஹேக் செய்யப்பட்ட வாட்ஸ்அப் கணக்குகள் மூலம் அதே போலியான செய்திகள் மற்றவர்களுக்கும் அனுப்பப்படுகின்றன.

மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளதாவது:

“இத்தகைய போலி பயன்பாடுகள் அல்லது APK கோப்புகளை வாட்ஸ்அப், மின்னஞ்சல் அல்லது எஸ்எம்எஸ் வழியாக பெற்றாலும், அது நண்பர் அல்லது குடும்பத்தினர் அனுப்பியதாக இருந்தாலும் கூட நிறுவ வேண்டாம்.
வாட்ஸ்அப்பில் Two-Step Verification வசதியை பயன்படுத்தி பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.”

வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்பட்டால் உடனடியாக
📧 support@whatsapp.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் அனுப்பவும் அல்லது
🌐 https://www.whatsapp.com/contact/?subject=messenger என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.

மேலும், எந்தவொரு நிதி இழப்பு அல்லது இணைய மோசடிகள் நடந்திருந்தாலும் உடனடியாக
📞 1930 என்ற சைபர் குற்ற எண் மூலம் அல்லது
🌐 www.cybercrime.gov.in தளத்தில் புகார் அளிக்குமாறு மாவட்ட காவல்துறை பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.


தூத்துக்குடி லீக்ஸ் செய்திகள்
— உங்கள் பாதுகாப்பு எங்கள் முன்னுரிமை


இப்படி தான் மோசடி பேர் வழிகள் உங்கள் இடம் கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்லி ஏமாற்றுவாங்க உஷாராக இருங்க 
வீடியோ விழிப்புணர்வுக்கான பதிவு 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக