திங்கள், 1 செப்டம்பர், 2025

பேருந்து நிலையம் ATM கோரிக்கை

Tamil Nadu updates, photo news by Arunan journalist 


தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

தூத்துக்குடி பொதுமக்கள் – பயணிகள் கோரிக்கை : பேருந்து நிலையத்தில் ஏடிஎம் அமைக்க வேண்டும்

தூத்துக்குடி :
மாநகரம் கல்வியறிவு, தொழில் வளர்ச்சி மற்றும் பல்வேறு பிரபல தொழிற்சாலைகள் காரணமாக நாளுக்கு நாள் முன்னேற்றம் கண்டுவருகிறது. 

மாடல் ஒவியம் 
thoothukudi new bus stand 


இன்றைய சூழலில் பெரும்பாலான மக்கள் கையில் பணம் வைத்துச் செல்லாமல், தேவைக்கு ஏற்ப அருகிலுள்ள வங்கி பணம் எடுக்கும் இயந்திரம் (ATM) மூலம் பணம் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர்.

 இது பாதுகாப்பானதும், பயணத்தில் அதிக பணம் இழப்பதற்கான அபாயத்தையும் குறைப்பதுமானது.

Thoothukudileaks


தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையம் என இரண்டு முக்கியமான பேருந்து நிலையங்கள் இயங்குகின்றன. இருந்தும், இப்பேருந்து நிலையங்களின் அருகாமையில் ATM வசதி இல்லாததால் பொதுமக்கள் மற்றும் பஸ் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

thoothukudileaks


பேருந்து நிலையத்துக்குள் புறநகர் காவல் நிலையம் இயங்கும் பகுதி அருகே காலியிடங்கள் உள்ளன பயணிகளின் பார்வைக்கு கண்ணில் படும்  வகையில் வங்கிகள் ATM இயந்திரங்களை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த கோரிக்கையை கருத்தில் கொண்டு, தூத்துக்குடி கனிமொழி எம்பி, தூத்துக்குடி தொகுதி எம்எல்ஏ, அமைச்சர் கீதா ஜீவன், மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் பொதுமக்களின் நலனுக்காக வங்கிகளுடன் இணைந்து, பேருந்து நிலையங்களில் உடனடியாக ATM வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்துகின்றனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக