👍
தூத்துக்குடி : 17.09.2025
மழை காரணமாக மாவட்டம் முழுவதும் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கும் சூழல் நிலவுகிறது. இந்நிலையில், மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகள் அருகே செல்லுவது உயிருக்கு ஆபத்தானது என்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை பொதுமக்களை எச்சரித்துள்ளது.
காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
- மின்கம்பம், மின்கம்பிகள் அருகே தேங்கியுள்ள தண்ணீரில் நடந்து செல்ல வேண்டாம்.
- அத்தகைய இடங்களின் அருகில் வாகனங்களை நிறுத்தவோ, குழந்தைகளை விளையாடவோ விடக்கூடாது.
- தண்ணீரில் மின்சாரம் பாயும் அபாயம் எப்போதும் இருப்பதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
- மின்கம்பம் அல்லது மின்கம்பி முறிந்து தண்ணீரில் விழுந்து காணப்பட்டால், உடனடியாக அருகிலுள்ள மின்வாரிய அலுவலகத்துக்கும் காவல்துறைக்கும் தகவல் தர வேண்டும்.
- மழை காலங்களில் பொதுமக்கள் தங்களது பாதுகாப்பை முன்னிருப்பில் வைத்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் உயிர் பாதுகாப்பே முதன்மை என்பதால், மழைநேரங்களில் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும், எச்சரிக்கை அறிவிப்பை கடைப்பிடிக்குமாறும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக