தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி
பெருங்குளம் பேரூராட்சியில் புதிய சுகாதார நிலைய கட்டிடம் அடிக்கல் நாட்டி விழா
தூத்துக்குடி மாவட்டம் : 17.09.2025
பெருங்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட பண்டாரவிளை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்காக ரூ.75 லட்சம் நிதி, தேசிய சுகாதார அறக்கட்டளை 15-வது மானியக் குழு மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டிடப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் பெருங்குளம் பேரூராட்சி மன்றத் தலைவர் டாக்டர் எஸ். புவனேஸ்வரி சண்முகநாதன் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவர் ஜி. வேதமாணிக்கம், கவுன்சிலர்கள் காமராஜ், சுப்பிரமணியன், பட்டுப்பாண்டி, வத்சலா மாணிக்கம், அதிமுக மாவட்ட சிறுபான்மை பிரிவு இணைச் செயலாளர் எப்ராயீம், மாவட்ட வர்த்தக அணி தலைவர் திருத்துவசிங், போக்குவரத்து பிரிவு தூத்துக்குடி செயலாளர் வெள்ளையா, நிர்வாகிகள் சுந்தரராஜன், சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக