புதன், 17 செப்டம்பர், 2025

தூத்துக்குடியில் சமூக நீதி நாள் உறுதிமொழி

📰 – தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

தூத்துக்குடி மாவட்டம் : 17.09.2025

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் இன்று சமூக நீதி நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17ஆம் தேதி சமூக நீதி நாள் அனுசரிக்கப்படுவதையொட்டி, இன்று (17.09.2025) மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப  தலைமையில் விழா நடைபெற்றது.

உறுதி மொழி வீடியோ பார்க்க 

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. ஆறுமுகம் உட்பட காவல்துறை அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் நிர்வாகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.



இதனைத் தொடர்ந்து அனைவரும் இணைந்து சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்தனர்.


 அதில்,

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் அன்பு நெறியை கடைப்பிடிப்பேன்.
சுயமரியாதை, பகுத்தறிவு, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கொள்கைகளில் வாழ்வேன்.
மனிதாபிமானத்தையும் சமூக நீதியையும் என்றும் போற்றுவேன்”

என்று உறுதி மொழி எடுக்கப்பட்டது.



மழை நேரங்களில் மின்கம்பம் அருகில் தேங்கி நிற்கும் தண்ணீரில் நடக்கவோ அல்லது அதன் அருகிலோ செல்ல வேண்டாம்.

👉 இச் செய்தியில் புகைப்படங்களில் செயற்கை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக