வெள்ளி, 26 செப்டம்பர், 2025

அரசியல் பொய்யர் சீமான் அதிமுக முன்னாள் அமைச்சர் சித செல்லப்பாண்டியன் தீடீர் பாய்ச்சல்

“அரசியல் பொய்யர் சீமான் – வாய்க்கு வந்ததை பிதற்றுபவர்!” : முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தீடீர் பாய்ச்சல்

தூத்துக்குடி அதிமுக மாநில வா்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன், சீமான் மீது தீடீரென பாய்ந்துள்ளார்.

தூத்துக்குடி லீக்ஸ்

வரலாறு தெரியாத முட்டாள் !!!

அவரது அறிக்கையில், “நானும் அரசியலில் இருக்கிறேன் என்று வெளிச்சம் தேடும் அரசியல் பொய்யர் சீமான், மறைந்த தலைவர்களின் வரலாறு அறியாமல், அரசியல் நாகரீகம் இன்றி வாய்க்கு வந்ததை பிதற்றிக் கொண்டிருக்கிறார். 

இன்றைய தலைவர்களை குறித்துத் தரம் தாழ்ந்த பேச்சு பேசியிருப்பது கண்டிக்கப்பட வேண்டிய கேவல செயல்” எனக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அறிவு குறைவு!!!

மேலும் அவர், “அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோர் தமிழக அரசியலில் அரசியல் மரபை நிலைநிறுத்திய தலைவர்கள். அவர்களின் பங்களிப்பை மறந்து பேசிய சீமான், தன்னுடைய அரசியல் அறிவு எவ்வளவு குறைவானது என்பதை வெளிப்படுத்திக் கொண்டுள்ளார். 

மன்னிக்க முடியாது!!!

இன்று மக்களின் நெஞ்சங்களில் இன்னும் நிலைத்திருக்கும் எம்.ஜி.ஆர் குறித்து அவமதித்து பேசுவது, மன்னிக்க முடியாத அரசியல் குற்றம். நீங்கள் தலைவர் எனக் கொண்டாடும் பிரபாகரனே எம்.ஜி.ஆர் அவர்களை தலைவராக மதித்தார் என்பதையும் மறந்துவிட்டீர்களா சீமான்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


எச்சரிக்கை!!!

அத்துடன், “அரசியல் தெரியாமல், மாண்புமிகு தலைவர்களின் வரலாறைத் தெரியாமல் இனி பிதற்ற வேண்டாம். அதனைத் தொடர்ந்தால் அது உங்களின் அரசியல் அழிவின் தொடக்கமாக மாறும் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்” என்று சீமானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பயணம்!!!

இறுதியாக, “மறைந்த எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா வழியில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நல்லாட்சியை நிறுவுவதே எங்கள் இலக்கு. அதற்காக எங்கள் அரசியல் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது” என்றும் சி.த.செல்லப்பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.


👉 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக