திங்கள், 14 ஜூலை, 2025

தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் சார்பில் தலைவர் முரளிதரன் தலைமையில் பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழக முதல்வர் காமராசர் பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாட்டம் முழு விவரம் பார்க்க

Tamil Nadu updates photo news by Arunan journalist காமராஜர் பிறந்த நாள் விழா – பள்ளி மாணவமாணவியருக்கு இனிப்பு வழங்கிய காங்கிரஸ்

தூத்துக்குடி, ஜூலை 15:

தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் சார்பில் தலைவர் முரளிதரன் தலைமையில் பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி முன்னாள் தமிழக முதல்வர் காமராசர் பிறந்த நாள் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது.




இது பற்றிய செய்தியாவது ...

அகில இந்திய காங்கிரஸ் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழக முதல்வருமான  காமராசர் பிறந்த நாள் முன்னிட்டு தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினரால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது






தூத்துக்குடியில் இன்று புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆர்சி பெத்தானி தொடக்க பள்ளியில் தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பெருந்தலைவர் காமராஜர் 123 வது பிறந்த நாள் பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு லட்டு வழங்கினார்கள்.



காமராஜர் சாதனைகள்!!!

நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் மாணவர்களுக்கு காமராஜரின் சாதனைகள் மற்றும் கல்விக்கு அளித்த பங்களிப்பு குறித்து விளக்கமளித்தார். 


இந்த நிகழ்வு மாணவர்களிடையே கல்வி மீது ஈடுபாடு ஏற்படுத்தும் வகையில் நடந்தது.


. இந்த நிகழ்ச்சியில்...

தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன் மாவட்ட செயலாளர் கோபால் வடக்கு மண்டல தலைவர் சேகர் 11- வது வார்டு தலைவர் மகேந்திரன் 11 வார்டு துறை தலைவர் சீனிவாசன் 3 வார்டு அருண், மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

.. அதன் பின்னர்...






தூத்துக்குடி கந்தசாமி புரத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் 20  குழந்தைகளுக்கு மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு லட்டு வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது .







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக