Tamil Nadu updates,
Photo news by sunmugasuthram press club president
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது
அதிமுக ஆட்சியில் செயல்படாமல் இருந்து நலவாாியங்களை திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் அனைத்து துறைகளும் சிறப்பான முறையில் செயல்படுகின்றன.
அதில் நலவாாியத்தில் பதிவு செய்யாத 18 வயதுக்கு மேற்பட்ட 60 வயதுக்குட்பட்ட தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் உள்ள தொழிலாளா்களுக்கு பதிவு செய்யும் சிறப்பு முகாம் டூவிபுரம் சட்டமன்ற ஊறுப்பினர் அலுவலகத்தில் நாளை ஞாயிற்றுகிழமை காலை நடைபெறுகின்றது.
இதில் கட்டுமானம் உடல் உழைப்பு அமைப்புசாரா சலவை தொழிலாளா்கள் முடிதிருத்துவோா் தையல் தொழிலாளா்கள் கைவினை தொழிலாளா்கள் கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெய்யும் தொழிலாளா்கள் காலணி தோல் பொருட்கள் உற்பத்தி மற்றும் தோல் பதனிடும் தொழிலாளா்கள் பொற்கொல்லா் ஓவியா் மண்பாண்டம் வீட்டு பணியாளா் பாதையோர வணிகா்கள் சமையல் தொழிலாளா்கள் உப்பளம், உணவு விநியோம் செய்வோா் இத்திட்டத்தில் இணைந்து பதிவு செய்து கொள்ள வருபவா்கள் வயதுக்கான ஆவணம் பள்ளி அல்லது பிறப்பு சான்றிதழ் குடும்ப அட்டை ஓட்டுநா் உாிமம், வாக்காளர் அடையாள அட்டை வங்கி கணக்கு புத்தகம் ஆதாா் அட்டை தொழிலாளி புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்கள் கொண்டு வந்து சமா்ப்பித்து நலவாாியத்தில் உறுப்பினராகி பயனடைந்து கொள்ளுமாறு வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளாா்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக