புதன், 7 மே, 2025

புகார் கொடுங்கள் – அதிகாரிகள் உங்கள் வீடு தேடி வருவார்கள் மேயர் ஜெகனின் முக்கிய அறிவிப்பு:

Tamil Nadu updates photo news by sunmugasuthram press club president 


THOOTHUKUDI LEAKS |


புகார் கொடுங்கள் – அதிகாரிகள் உங்கள் வீடு தேடி வருவார்கள்

தூத்துக்குடி:
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில், தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் வாரந்தோறும் மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

 தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலணியில் உள்ள வடக்கு மண்டல அலுவலகத்தில் இன்று 7-5-2025 நடைபெற்ற முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார்.

பழைய கோப்பு புகைப்படம் 



மேயர் ஜெகனின் முக்கிய அறிவிப்பு:
“பொதுமக்கள் ஆன்லைனில் புகார் அளிக்கலாம். அதிகாரிகள் உடனடியாக நேரில் சென்று நடவடிக்கை எடுப்பார்கள். மக்களின் தேவை என்னவோ அதை நிறைவேற்றுவதே எங்கள் நோக்கம்.”

அவர் மேலும் கூறியது:

  • கடந்த 11 மாதங்களில் 546 மனுக்கள் பெறப்பட்டு அனைத்தும் தீர்க்கப்பட்டுள்ளன.
  • மே மாதத்துக்குள் புதிய சாலைகள் அமைக்கப்படும்.
  • அனுமதியின்றி அமைக்கப்படும் பந்தல்களுக்கு அனுமதி இல்லை – 

  • பாதாள சாக்கடை பணிகள் 80% முடிந்துள்ளன. மீதமுள்ள 20% விரைவில் முடிக்கப்படும்.
  • சாக்கடையில் பணியாளர்கள் இறங்க வேண்டிய நிலை இல்லை. இயந்திரம் மூலம் சுத்திகரிப்பு.

கலந்து கொண்டோர் முழுப் பட்டியல்:

  • இணை ஆணையர் சரவணக்குமார்
  • மண்டல தலைவர் நிர்மல் ராஜ்
  • பொறியாளர் தமிழ்ச்செல்வன்
  • உதவி ஆணையர் சுரேஷ்குமார்
  • நகர அமைப்பு திட்ட பொறியாளர் ரெங்கநாதன்
  • உதவி செயற்பொறியாளர் ராமசந்திரன்
  • நகர்நல அலுவலர் சரோஜா
  • சுகாதார ஆய்வாளர் ராஜசேகர்
  • மாநகராட்சி கணக்கு குழு தலைவர் ரெங்கசாமி
  • சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார்
  • பணிக்குழு தலைவர் கீதா முருகேசன்
  • மாநகராட்சி கவுன்சிலர்கள்:
    • தெய்வேந்திரன்
    • நாகேஸ்வரி
    • ஜெயசீலி
    • கற்பக கனி
    • அந்தோணி பிரகாஷ் மார்ஷலின்
  • வட்டச்செயலாளர் ரவீந்திரன்
  • வட்ட பிரதிநிதி புஷ்பராஜ்
  • போல்பேட்டை பகுதி பிரதிநிதி ஜெஸ்பர்
  • மாநகர் மாவட்ட காங்கிரஸ் மண்டலத் தலைவர் சேகர்

பொதுமக்கள் நினைவில் வைக்க வேண்டியது:
“தவறான தகவல்களை பரப்ப வேண்டாம். நாங்கள் மக்களுக்கு நேரடியாக சேவை செய்ய தயார். ஊக்கத்துடன் செயல்படுவோம்” என்று மேயர் வலியுறுத்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக