புதன், 7 மே, 2025

மதிமுக 32 வது ஆண்டு விழா தூத்துக்குடியில்கோலாகலமாக கொண்டாடப்பட்டது

Tamil Nadu updates photo news by sunmugasuthram press club president 

தூத்துக்குடி லீக்ஸ் செய்தி –

 மதிமுக 32வது ஆண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது

தூத்துக்குடி:
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) 32வது ஆண்டு விழா தூத்துக்குடியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.



தூத்துக்குடி பாலவிநாயகர் கோவில் அருகே அமைந்துள்ள மதிமுக அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் ரமேஷ் கட்சி கொடியை ஏற்றி விழாவைத் தொடங்கி வைத்தார். ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் விநாயகா ரமேஷ் விழாவுக்கு தலைமை வகித்தார்.

விழாவின் ஒரு பகுதியாக, பழைய பஸ் ஸ்டாண்டில் பட்டாசுகள் வெடிக்கவிட்டு, பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

விழாவில் நிர்வாகிகள் பேச்சிராஜ், ரஞ்சன், கஜேந்திரன், நக்கீரன், முத்துசெல்வன், ராமசந்திரன், முருகபூபதி, மகாராஜன், சுந்தராஜ், ஆண்டாள், ராமுஅம்மாள், வீரபாண்டி சரவணன், ராஜ்குமார், ராஜசேகர், ஜெயக்கொடி, மோகன், பால்ராஜ், தொம்மை, முருகேசன், செந்தாமரைக் கண்ணன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வின் மூலம்....

மதிமுக தொண்டர்களின் உற்சாகமும், ஒற்றுமையும் மெருகேறியது.

இதேபோன்ற நிகழ்வுகளை மற்ற பகுதிகளிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதென மதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக