Tamil Nadu updates Arunan journalist
Photo news by sunmugasuthram press club president 5-5-2025
தூத்துக்குடி லீக்ஸ் செய்தி
விஜய் ரசிகர்களின் அரசியல் பிரச்சார வீடியோ வெளியீடு - ஸ்டெர்லைட் சம்பவம் மீண்டும் ஞாபகம்!
தூத்துக்குடி:மே 5
தமிழக வெற்றி கழகத்தின் நிறுவனர் விஜய்க்காக அவரது ரசிகர்கள் தயாரித்த ஒரு அரசியல் பிரச்சார வீடியோ, தூத்துக்குடி பத்திரிகையாளர் மையத்தில் வெளியிடப்பட்டது.
இந்த வீடியோவில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களை நடிகர் விஜய் நேரில் சந்தித்து பண உதவி வழங்கிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
வீடியோ வெளியீட்டு நிகழ்வில் வில்லன் நடிகரும், இயக்குநருமான உறியடி சங்கர்தாஸ், மற்றும் ஸ்டார் பாபு பங்கேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். “இது தலைமை கழகம் ஒப்புதல் தராமல், வெறும் ரசிகர்கள் முயற்சியாக உருவாக்கிய வீடியோ,” என்று உறியடி சங்கர்தாஸ் தெரிவித்தார். “விஜய் மக்களுக்காக கட்சி தொடங்கினார் என்பதை நினைவூட்டவே இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது,” என்றும் கூறினார்.
வீடியோவில் ஒரு தரப்பினர் கட்சிக் கொடியை இழிவுபடுத்தும் முயற்சி செய்து, அதை ஒரு ரசிகர் தடுத்து நிறுத்தும் காட்சி இடம்பெறுகிறது. இதன் மூலம் “களத்தில் மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதே நோக்கம்” என்று கூறப்படுகிறது.
இந்த நிகழ்வில் பாபு கணேசன், பாலா, சிவா, அழகர், தங்கராஜ், வசந்த் உள்ளிட்ட விஜய் ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
பேட்டி வழங்கியவர்: உறியடி சங்கர்தாஸ், வில்லன் நடிகர்
விஜய் ரசிகர்கள் - வீடியோவுடன் வந்து விட்டார்கள்… வில்லனோடு!
விமர்சன பார்வை:?
இந்த வீடியோ, ரசிகர்களால் தயாரிக்கப்பட்டதென்றாலும், இதில் காட்டப்படும் அரசியல் கோணமும், விஜயின் களப்பணியின் பிம்பமும் மிக தெளிவாக வைக்கப்பட்டுள்ளன.
தலைமை கழகம் ஒப்புதல் தரவில்லை என்றாலும், விஜயின் அரசியல் அடையாளம் மக்களிடம் வலுவாக பதிய முயல்வது இதில் மறைமுகமாக தென்படுகிறது.
அத்துடன், ஸ்டெர்லைட் சூட்டுச் சம்பவத்தை மீண்டும் பரப்பும் இந்த முயற்சி, உணர்ச்சிப் பிம்பங்களை கிளப்பும் ஒரு ‘சாதனையாக’ பார்க்கப்படுகிறது.
இது ஒருபுறம் அரசியல் அறைகூவலாகவும், மறுபுறம் கடந்த 2018 மே 22 தூத்துக்குடி நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராளி கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் வருத்தங்களை மீண்டும் கட்சி ஆதரவாக மாற்றும் முயற்சியாகவும் வாசிக்கப்படுகிறது.
வேதனையை தருகிறது.
மேலும், “கொடியை எறிந்து தீ வைக்க முயல்பவர்” என்பது யாரை குறிக்கிறது என்ற கேள்வி எழுகிறது – இது? ஆளும் கட்சி, எதிர் கட்சி களுக்கு சுட்டி காட்டலா? என்பதுதான் தற்போது விவாதப் பொருள்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக