வெள்ளி, 23 மே, 2025

தூத்துக்குடியில் போக்குவரத்து துறை தொழிலாளர்களின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – திமுக அரசை வன்மையாக சாடிய அண்ணா தொழிற்சங்கம்

Tamil Nadu updates, photo news by Arunan journalist 23-5-2025


தூத்துக்குடியில் போக்குவரத்து துறை தொழிலாளர்களின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – திமுக அரசை வன்மையாக சாடிய அண்ணா தொழிற்சங்கம்

தூத்துக்குடி: மே23
திமுக அரசு போக்குவரத்து துறை தொழிலாளர்களின் கோரிக்கைகளை முறையாகப் பூர்த்தி செய்யாமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து, அண்ணா தொழிற்சங்கம் சார்பில் தூத்துக்குடியில் மண்டல அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் ஆணைக்கிணங்க, அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர். கமலக்கண்ணன் ஆலோசனையிலும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜு ஆகியோரின் வழிகாட்டுதலிலும், மண்டல செயலாளர் கல்விக்குமார் தலைமையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது






இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தொழிற்சங்க செயலாளர்கள் டேக். ராஜா, ராஜேந்திரன், ஆட்டோ சங்க செயலாளர் நிலா. சந்திரன், பொன்னம்பலம், ஆனந்த் உள்ளிட்டோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அண்ணா தொழிற்சங்க பேரவை இணைச்செயலாளர் சங்கரலிங்கம் கலந்துகொண்டு உரையாற்றினார்.

முக்கிய கோரிக்கைகள்:

  • 4 வருட ஒப்பந்தம் முடிந்துவிட்ட போக்குவரத்து ஊழியர்களுடன் புதிய பேச்சுவார்த்தையை உடனடியாக நடத்தல்
  • ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள டி.ஏ உடனடியாக வழங்கல்
  • பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தல்
  • மின்சாரத் துறையில் கிடைத்தபடி 3% சிறப்பு ஊதிய உயர்வு
  • போக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியர்களாக மாற்றும் ஆணை வெளியீடு

இந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு, “திமுக அரசு தேர்தல் வாக்குறுதியின்படி உடனடியாக தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்” எனக் கோஷமிட்டனர்.

கலந்துகொண்ட முக்கிய நிர்வாகிகள்: தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், விளாத்திகுளம், சாத்தான்குளம் பகுதிகளிலிருந்து லட்சுமணன், பாலமுருகன், பார்வதி, லட்சுமணகுமார், மாரியப்பன், அபயம் தீர்த்தான், திருமணி, காதர் முகைதீன் சாகீப், வைரமணி, பொன்ராஜ், சங்க நாராயணன், உத்தரபாண்டி, சண்முகராஜ், கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக