"நெஞ்சம் மறப்பதில்லை" – ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு வணிகர் சங்கத்தின் அஞ்சலி
தூத்துக்குடி:
2018-ம் ஆண்டு மே 22-ல் தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது காவல்துறை துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த தியாகிகளின் நினைவாக, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை – தூத்துக்குடி மத்திய சங்க வியாபாரிகள் சார்பில் “நெஞ்சம் மறப்பதில்லை” 7-ம் ஆண்டு மே22 நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
வியாபாரிகள் சங்க செயலாளர் . தெர்மல் ராஜா தலைமையில்... நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் தூத்துக்குடி மத்திய சங்கத்துக்கு உட்பட்ட ஏராளமான வியாபாரிகள் கலந்துகொண்டு தியாகிகளுக்கு மரியாதை செலுத்தினர்.
வீடியோ....
(வணிகர் சங்கம் செயலாளர் தெர்மல் ராஜா பேசுகையில்...)
தூத்துக்குடி மத்திய சங்க வியாபாரிகள் கட்டிடம் முன்பாக நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் போராசிரியை பாத்திமா பாபு, பாதர் செல்வராஜ் - தங்கையா, தூத்துக்குடி சங்கு குளி தலைவர் இசக்கி முத்து, கிளியோபாட்ரா இருதயராஜ் பண்டாரம்பட்டி சகாயம்,வழக்கறிஞர் மாடசாமி மதிமுக அவைத்தலைவர் பேச்சிமுத்து மகாராஜன் மற்றும் மாநகர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
வீடியோ...(வணிகர் சங்க நினைவேந்தல் கலந்து கொண்ட அண்ணா சங்கு குளி தொழிலாளர் சங்க தலைவர் இசக்கி முத்து பேசுகையில்...)
வீடியோ...(வணிகர் சங்கம் நினைவேந்தல் நிகழ்வு கலந்து கொண்டு போராட்டம் தொடரும் என ஒங்கி ஒலித்த வழக்கறிஞர் மாடசாமி பேசுகையில்)
![]() |
| தூத்துக்குடி பண்டாரம் பட்டி |
![]() |
| பாத்திமா நகர் மண்டபத்தில் |
![]() |
| தூத்துக்குடி கிளியோபாட்ரா தியேட்டர் அருகில் |
![]() |
| வணிகர் சங்கம் வியாபாரிகள் |
![]() |
| தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் |
நிகழ்வை முன்னிட்டு, தூத்துக்குடி முழுவதும் கண்ணீர் அஞ்சலி நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
திரேஸ்புரம், பாத்திமா நகர், பண்டாரம்பட்டி, கிளியோபாட்ரா தியேட்டர் உள்ளிட்ட பகுதிகளில் வணிகர் சங்க உறுப்பினர்கள் நினைவஞ்சலி செலுத்தினர்.
செயலாளர் தெர்மல் ராஜாவுடன், சங்க பொருளாளர் விக்னேஷ் மற்றும் பலர் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். "நம் தியாகிகளை மறக்க முடியாது, வணிகர்கள் என்றும் அவர்களின் நீதிக்கான போராட்டத்தை நினைவில் கொள்வோம்" என அவர்கள் உரைத்தனர்.
– தூத்துக்குடி லீக்ஸ் -க்காக அருணன் செய்தியாளர்












கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக