வெள்ளி, 23 மே, 2025

மாவீரர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1350-ஆவது சதயவிழா – தூத்துக்குடியில் தவெக மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆர்கனல் பங்கேற்பு

Tamil Nadu updates,

தூத்துக்குடி, மே 23:
தான் கலந்துகொண்ட அனைத்து போருகளிலும் வெற்றியைப் பெற்ற வீரர், வாகை மலரின் வரலாற்றுக்கும், தமிழகத்தின் வீர அடையாளங்களுக்கும் சொந்தக்காரரான மாவீரர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1350-ஆவது சதயவிழா இன்று தூத்துக்குடியில் மரியாதையுடன் கொண்டாடப்பட்டது.



இந்த விழாவைத் தூத்துக்குடி மாநகராட்சி 8வது வார்டில் அமைந்த திரேஸ்புரம் ஸ்ரீ ஆதி முனீஸ்வரர் ஆலயம் முன்பாக, ஊர்க் குழுவினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.



 விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளராக உள்ள  அஜிதா ஆக்னல் M.Sc., B.Ed., கலந்து கொண்டு, அலங்கரிக்கப்பட்ட மாவீரர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.




விழாவுக்கு முன்னதாக, ஸ்ரீ ஆதி முனீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு சாமி தரிசனம் மேற்கொள்ளப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.


 இந்நிகழ்வு, பாரம்பரியத்தை பேணும் வகையில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக