வியாழன், 22 மே, 2025

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நினைவேந்தல் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தியாகிகளுக்கு 7ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி

Tamil Nadu updates,


ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தியாகிகளுக்கு 7ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நினைவேந்தல் நிகழ்வுகள்

தூத்துக்குடி, மே 22:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018-ம் ஆண்டு நடைபெற்ற மக்களுரிமை போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டால் உயிரிழந்த 13 போராளிகளை நினைவு கூறும் வகையில், 7ஆம் ஆண்டு வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.


தூத்துக்குடி பழைய மாநகராட்சி பகுதியில் 


தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மாவட்ட பொறுப்பாளர்  A.அஜிதா ஆக்னல் M.Sc., B.Ed., தலைமையில் நினைவேந்தல் நிகழ்வுகள் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றன.

நகரின் முக்கிய இடங்களான பழைய மாநகராட்சி அலுவலகம், காமராஜ் கல்லூரி அருகில், அமெரிக்கன் ஆஸ்பத்திரி சந்திப்பு, ஸ்டேட் பாங்க் காலனி மெயின் ரோடு மற்றும் முத்தையாபுரம் சந்திப்பில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.



தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் 


மேலும், திரேஸ்புரம் மற்றும் பாத்திமா நகர் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்களாகவே நினைவேந்தல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்து, தீவிர உணர்வுடன் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடி பாத்திமா நகர் பகுதியில் 


இந்த நிகழ்வுகளில் வெற்றிக் கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு, தியாகிகளின் நினைவில் மெளன அஞ்சலி செலுத்தினர். மக்கள் உரிமை காக்க உயிர் கொடுத்த வீரர்களின் தியாகம் என்றென்றும் நினைவில் நிலைக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக