புதன், 7 மே, 2025

தூத்துக்குடி மேயர் நரிக்குறவ மக்களுக்கு நிவாரண உதவி: வீட்டு வசதிக்கும் உறுதி"

#"தூத்துக்குடி மேயர் நலிந்த ஏழை நரிக்குறவ மக்களுக்கு அரிசி பை வழங்கினார்.

தூத்துக்குடி, மே 8: தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் திமுகவின் ஐந்தாண்டு ஆட்சி தொடக்க விழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் எதிர்பாராத சந்திப்பு ஒன்று உருவானது.



 பொதுமக்களுக்கும் பயணிகளுக்கும் இனிப்பு லட்டு வழங்குவதற்காக வந்திருந்த மாநகராட்சி மேயர் ஜெகன், அங்கு தங்கியிருந்த நரிக்குறவ சமுதாயத்தைச் சேர்ந்த ஏழை குடும்பங்களின் குறைகளை கேட்டறிந்தார்.




நிகழ்ச்சியின் போது நலிந்த ஏழை நரிக்குறவ சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் மேயரை அணுகி, தங்களுக்கு விரைவாக வீடுகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். 


இதற்கு பதிலளித்த மேயர் ஜெகன், "நரிக்குறவர்களுக்கு ஏற்கனவே பேரூரணி அருகே இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. 


விரைவில் உங்களுக்கு வீடுகள் வழங்கப்படும்" என்று உறுதியளித்தார்.


மேலும் அவர், "நீங்கள் வீட்டிலிருந்து நேராக தொழில் செய்யும் இடத்திற்குச் சென்று, வேலை முடிந்த பின் மழை வெயிலில் பாதிக்கப்படாமல் வீட்டிற்குத் திரும்ப வேண்டும்" என்று அறிவுறுத்தினார்.


உடனடி உதவியாக உணவுப் பொருட்கள் வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்த மேயர், பேருந்து நிலையத்தில் தங்கியிருந்த 32 நரிக்குறவ ஏழை குடும்பங்களுக்கும் தலா 5 கிலோ அரிசி பைகளை வழங்கினார்.


 அதுமட்டுமின்றி, அவர்களுக்கு உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் உடனடியாக செய்து கொடுத்தார்.


இந்த உதவிகளுக்கு நன்றி தெரிவித்த நரிக்குறவர்கள், தங்களுக்கான நிரந்தர வீட்டு வசதி விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் காணப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக