புதன், 7 மே, 2025

சாலை பாதுகாப்பு உபகரணங்கள் கொள்முதல்: ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு

தூத்துக்குடி லீக்ஸ் செய்தி – 07.05.2025

தூத்துக்குடி மாவட்டம்

சாலை பாதுகாப்பு உபகரணங்கள் கொள்முதல்: ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு வெளியீடு

தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், பல்வேறு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் உதிரி பாகங்களை மாவட்ட காவல் துறை சார்பில் விரைவில் கொள்முதல் செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.



இதற்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு 07.05.2025 அன்று வெளியிடப்பட்டு, விற்பனை செய்ய விருப்பமுள்ள நிறுவனங்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கொள்முதல் செய்ய உள்ள பொருட்களின் விவரம் வருமாறு:

  • Breathing Analyzer – 30
  • சக்கரங்களுடன் கூடிய விரிவடையும் உலோக தடுப்பு கவண் (5x8 அளவு) – 25
  • மஞ்சள் நிற 3 மிமீ பிரதிபலிக்கும் டேப் (50மிமீ x 50மீட்டர்) – 10
  • சிவப்பு நிற 3 மிமீ பிரதிபலிக்கும் டேப் (50மிமீ x 50மீட்டர்) – 10
  • மஞ்சள் நிற பிளிங்கர்கள் (தடுப்பு கவணில் பொருத்தக்கூடியது) – 30

இந்த ஒப்பந்தப்புள்ளிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நிறுவனங்கள், பொருட்களின் தரநிலை மற்றும் வர்த்தக விவரங்களை 21.05.2025 அன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.



ஒப்பந்தப்புள்ளிகள் 22.05.2025 அன்று திறக்கப்படும். அது விடுமுறை நாளாக இருந்தால் அடுத்த வேலை நாளில் ஒப்பந்தங்கள் திறக்கப்படும் எனவும் மாவட்ட காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

– தூத்துக்குடி லீக்ஸ் செய்தியாளர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக