Tamil Nadu updates
தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழகத்தின் கோடைக்கால உதவிப் பந்தல்கள் – மக்களின் மனங்களை வென்ற முயற்சி!
தூத்துக்குடி, ஏப்ரல் 27:
கடுகடுக்கும் வெயில் மக்களை துன்புறுத்தும் இந்த கோடைக்காலத்தில், தமிழக வெற்றிக் கழகம் மக்கள் நலனுக்காக முனைந்துள்ளது.
தளபதியார் விஜய் உறுதியான ஆணை, பொதுச் செயலாளர் . N. ஆனந்த் அவரது வழிகாட்டுதலின் கீழ், தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் A. அஜிதா ஆக்னல் தலைமையில், இரண்டாம் கட்ட நீர் பந்தல் திட்டம் இன்று சிறப்பாக தொடங்கப்பட்டது.
மக்கள் கூடும் முக்கிய இடங்களில் பந்தல்கள்!
வெயிலின் வெப்பத்தை சமாளிக்க, தூத்துக்குடி மற்றும் ஓட்டப்பிடாரம் தொகுதிகளில், கழகத் தோழர்களால் பந்தல்கள் அமைக்கப்பட்டன. முக்கிய இடங்கள்:
- அமெரிக்கன் ஆஸ்பத்திரி ரவுண்டானா அருகில் (21வது வார்டு)
- அம்பேத்கர் நகர் மெயின் (4வது வார்டு)
- பூப்பாண்டியாபுரம் சோட்டையன் தோப்பு (10வது வார்டு, ஓட்டப்பிடாரம் தொகுதி)
- மாதாநகர் மெயின் (12வது வார்டு, ஓட்டப்பிடாரம் தொகுதி)
- தாளமுத்துநகர் மெயின் (ஓட்டப்பிடாரம் தொகுதி)
தண்ணீர் பழம் முதல் ரோஸ்மில்க் வரை – !
இந்த பந்தல்களில், குளிர்ந்த குடிநீர், ருசியான மோர், இனிமைமிகு ரோஸ்மில்க் மற்றும் தண்ணீர் பழங்கள் ஆகியவை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. வெயிலால் மெலிந்த முகங்களில் மீண்டும் சிரிப்பை கொண்டு வந்த இந்த சேவை, மக்களின் நெஞ்சை தொட்டது.
மக்கள் மனம் திறந்து பாராட்டு
"வெயிலில் கூட நம்மை நினைத்து இப்படி பந்தல்கள் அமைத்தது சந்தோஷமா இருக்கு," என்றார் அருகில் வந்த ஒருவர்.
"தளபதி விஜய் அரசியல் நிதர்சனத்தை இப்போது நன்கு உணர்கிறோம்," என்றார் மற்றொருவர்.
தூத்துக்குடியில் வெற்றிக் கழகம் நடத்தும் இந்த நடவடிக்கை, சமூகப் பொறுப்பின் சிறந்த உதாரணமாக மக்கள் மத்தியில் பாராட்டுப் பெருக்கெடுத்துள்ளது
"வெயில் எரிக்கும் நேரத்தில் ஒரு குவளை தண்ணீர் கொடுப்பதும் தலைசிறந்த தர்மம்" என்பதை செயல்படுத்தும் விதமாக, கழகத்தின் பொதுச் செயலாளர் .N.ஆனந்த் வழிகாட்டுதலில், தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் .A. அஜிதா ஆக்னல் தலைமையில் இந்த தாகம் தீர்க்கும் திட்டம் உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது.







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக