தூத்துக்குடியில் போல்பேட்டை ஆலய குருவானவர் மீது பாலியல் குற்றச்சாட்டு
100 வருடங்களை கடந்த தூயமிகாவேல் ஆலயத்தில் பெரும் சர்ச்சை
தூத்துக்குடி போல்பேட்டை பகுதியில் அமைந்துள்ள தூயமிகாவேல் ஆலயத்தில் தற்போதைய குருவானவர் லிவிங்ஸ்டன் மீது சபை மக்கள் கடும் குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளனர். 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களை கொண்ட இவ்வாலயம், நகரின் முக்கியமான திருச்சபையாக விளங்குகிறது.
தவறான உறவு குற்றச்சாட்டு
ஆலய உறுப்பினராக இருக்கும் ஒரு பெண்மணியுடன் குருவானவருக்கு தவறான தொடர்பு இருப்பதாக பரவலாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தால், குருவானவரின் மனைவிக்கும், பெண்மணிக்கும் ஆலய வளாகத்தில் முறையீடுகள் மற்றும் மோதல்கள் ஏற்பட்டுள்ளன.
இதன் விளைவாக, பல சபை மக்கள் ஆலயத்திற்கு வருவதை தவிர்க்க தொடங்கியுள்ளனர். சிறப்பாக இயங்கி வந்த ஆலயத்தின் நற்பெயரும் புனிதத்தன்மையும் கேள்விக்குள்ளாகியுள்ளது.
முந்தைய புகார்கள், நிதி கோளாறுகள்
கடந்த காலங்களில் பணியாற்றிய ஆலயங்களிலும் குருவானவர் லிவிங்ஸ்டனின் மீது காணிக்கைத் தொகைகளை முறைகேடாக பயன்படுத்தியதாக புகார்கள் எழுந்துள்ளது. அவருக்கெதிராக இதற்கு முன்பும் பல ஆலயங்களில் பிரச்சினைகள் உருவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நந்தகோபாலபுரம் சேகர குழப்பம்
தற்போது, முன்னாள் டி.எஸ்.எப் நிர்வாகத்தினர், லிவிங்ஸ்டனை அருகிலுள்ள நந்தகோபாலபுரம் சேகரத்தின் தலைவர் என அறிவித்து, புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
இந்தத் தீர்மானத்துக்கு எதிராக நந்தகோபாலபுரம் சபை மக்கள் நீதிமன்றத்தையும் நாடினர்.
இந்நிலையில், பேராயர் அருள்திரு செல்வின் துரை உத்தியோகபூர்வமாக வேறு ஒருவரை நந்தகோபாலபுரம் சேகரத் தலைவராக நியமித்து நிலை தெளிவுபடுத்தியுள்ளார்.
உப தலைவர் தமிழ்ச்செல்வன் லிவிங்ஸ்டனை தலைமையில் நிலைநிறுத்த முயற்சிப்பது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சபை மக்கள் எதிர்பார்ப்பு
இவ்வகை நிலவரங்களைத் தொடர்ந்து, தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்திற்குட்பட்ட நீதி அரசரின் தலையீட்டில் விரைவில் நியாயமான தீர்வு கிடைக்கும் என சபை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
"சபையின் நற்பெயரை காக்கவும், முறையான நடவடிக்கைகள் எடுக்கவும் அதிகாரிகள் முன்வர வேண்டும்" என்று சபை உறுப்பினர்கள் உறுதியுடன் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக