வெள்ளி, 25 ஏப்ரல், 2025

தூத்துக்குடி: மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சியில் அதிகாரம் வழங்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த மாற்றுத்திறனாளிகள்

Tamil Nadu updates

Photo news by sunmugasuthram Reporter 

தூத்துக்குடி, ஏப்ரல் 25:

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி பதவிகளில் அதிகாரம் வழங்கும் சட்ட முன்வடிவை அறிமுகம் செய்து அறிவித்ததையடுத்து, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.



தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவனை மாற்றுத்திறனாளிகள் நேரில் சந்தித்தனர். 

முதலமைச்சருக்கு தங்கள் நன்றியைத் தெரிவிப்பதாக அமைச்சரிடம் கூறி, நினைவுப் பரிசுகளை வழங்கினர்.


இந்நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண்சுந்தர், துணை அமைப்பாளர் ரவி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்டப்பிரதிநிதி பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மோசஸ் அண்ணா ராஜன், செயலாளர் ஷெர்லி, நிர்வாகிகள் பத்மநாதன், பரமசிவம், வெற்றி, ராஜா, குருநாதன், மணி அல்பட் உள்ளிட்ட பலரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


மாற்றுத்திறனாளிகள் கருத்து


"தமிழகத்தில் 'எல்லோருக்கும் எல்லாம்' என்ற திராவிட மாடல் ஆட்சியில், மாற்றுத்திறனாளியாகிய எங்களையும் உள்ளாட்சி அமைப்பு பதவிகளில் அமர வைத்து அழகு பார்க்கும் வகையில் சட்டத்தை இயற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிக்கும், எங்கள் மாவட்ட அமைச்சர் கீதாஜீவனுக்கும் வாழ்நாள் முழுவதும் நன்றி விசுவாசமாக இருந்து பணியாற்றுவது மட்டுமின்றி, வரும் காலங்களில் திமுகவின் முன்னெடுப்புகளுக்கு முழுமையாக உழைப்போம்" என மாற்றுத்திறனாளிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக