திங்கள், 21 ஏப்ரல், 2025

தூத்துக்குடி உயர்நிலை-மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு

தூத்துக்குடி, ஏப்ரல் 21

தூத்துக்குடி தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற மாவட்ட தேர்தலில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.




தேர்தல் ஆணையர் வேலவன் தலைமையில் நடைபெற்ற இத்தேர்தலில், மாவட்டத் தலைவராக புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஆனந்தராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டார். 


செயலாளராக கோவில்பட்டி வ.உ.சி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பூபாண்டியும், பொருளாளராக வேப்பலோடை அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ராஜதுரையும் தேர்வு செய்யப்பட்டனர்.


மற்ற முக்கிய பொறுப்புகளில், சட்ட செயலாளராக வேம்பார் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கனகராஜ், தலைமையிடத்து செயலாளராக தூத்துக்குடி புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் அந்தோணிசாமி, செய்தி தொடர்பாளராக விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பாலமுருகன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


துணைத் தலைவர்களாக கோவில்பட்டி லட்சுமி ஆலை மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஜெகநாதன், படுக்கப்பத்து அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ரஞ்சித்குமார், திருச்செந்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பாலகணேஷ் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.


இணை செயலாளர்களாக ஈராச்சி சேனையர் கலைமகள் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் கல்யாணசுந்தரம், கொம்பன் குளம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் முருகேசன், காயல்பட்டினம் சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் நியாஸ் ஆகியோர் பொறுப்பேற்றனர்.


மாவட்ட மகளிர் அணி செயலாளர்களாக வெம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் வசந்தி, மேல்மாந்தை அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் பொன்செல்வி ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.


மேலும், மாநில பொதுக்குழு உறுப்பினர்களாக விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சேகர், நாலாட்டின் புதூர் கே.ஆர் சாரதா மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கணேசமூர்த்தி, பிள்ளையார்நத்தம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ராஜ்குமார், காயல்பட்டினம் எல்.கே மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் அப்துல் கபூர் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக