Tamil Nadu updates photo news by Arunan journalist
தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மேம்பாட்டு திட்டங்கள் – பல தீர்மானங்கள் நிறைவேற்றம்
தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று 30-4-2025 மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
மாநகராட்சி ஆணையர் . மதுபாலன் மற்றும் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தூத்துக்குடி 60 வார்டுகளைச் சேர்ந்த கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், நகரத்தின் முக்கிய தேவைகளை முன்னிட்டு பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, 2022-23, 2023-24, 2024-25 மற்றும் 2025-26 ஆண்டுகளுக்கான சாலை புனரமைப்பு, குடிநீர் குழாய் மாற்றம், கழிவுநீர் வடிகால் அமைப்புகள், வேலைவாய்ப்பு பயிற்சிகள், சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
முக்கிய தீர்மானங்கள்:
- 100க்கும் மேற்பட்ட தெருக்களில் சாலை புனரமைப்புப் பணிகள்.
- மத்திய மற்றும் மாநில நிதி மூலம் கழிவுநீர் வடிகால் அமைப்புகள்.
- மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்காக சிவில், மெக்கானிக்கல், கணினி போன்ற துறைகளில் வேலைவாய்ப்பு பயிற்சி.
- நகரில் தொழில் வாய்ப்பற்றவர்களுக்கு சிட்டி லைவ்லிஹூட் சென்டர் (CLC) வாயிலாக வேலை வாய்ப்பு திட்டங்கள்.
- சுகாதாரத் துறையில் தொழிலாளர்கள், டிரைவர்கள், கழிவுநீர் அகற்றும் ஊழியர்களுக்காக புதிய நியமனங்கள்.
" தூத்துக்குடி மாநகராட்சி மூலம் பராமரிக்கப்படும் பூங்கா மற்றும் தோட்டப்பணிகளுக்கு 98தூய்மை பணியாளர்கள் நகர்ப்புற வாழ்வாதார மையம் மூலம் தற்காலிகமாக பணிபுரிந்து வந்தனர்.அப்பணியாளர்களுக்கு நகர்ப்புற வாழ்வாதார மையம் மூலம் மாவட்ட ஆட்சியர் அவர்களின்செயல்முறை ஆணையில் தெரிவித்துள்ள தினக்கூலி ஊதிய விகிதப்படி ஊதியம் வழங்கும்பொருட்டு மாமன்ற தீர்மான எண்.461 நாள்.28.06.2024ல் அனுமதி பெற்று ஊதியம் வழங்கியநிலையில் தற்போது மேற்படி மாமன்ற தீர்மானத்தின் அனுமதி பெற்ற கால அளவு 31.03.2025வுடன்முடிவு பெற உள்ளதால்,மேற்கண்ட பணியாளர்கள் தொடர்ந்து தற்காலிகமாக பணிபுரியும் பொருட்டுதூத்துக்குடி மாநகராட்சியின் 4 மண்டலத்தினையும் சேர்த்துதற்காலிகமாக பணியமர்த்தி பணிகள் மேற்கொள்ள மாமன்ற அனுமதி வழங்கப்பட்டது."
மேயரும் ஆணையரும் கூட்டத்தில் பேசும்போது,
“மக்களின் தேவைகளை மனதார உணர்ந்து திட்டங்களை செயல்படுத்தவே இத்தகைய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன” என தெரிவித்தனர்.
நகரத்தின் விரிவான வளர்ச்சி மற்றும் மக்கள் நலனுக்காக எடுக்கப்பட்ட இத்தீர்மானங்கள் விரைவில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக