Tamil Nadu updates
news by Arunan journalist
புனித வெள்ளி அன்று மதுக்கடைகள் மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் உண்ணாவிரதம்
தூத்துக்குடி, ஏப்ரல் 10:
ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறும் புனித வெள்ளி நாளில் தமிழ்நாடு முழுவதும் அரசு மதுக்கடைகள் மூட வேண்டும் என்பதைக் கோரி, தமிழக அரசு கொள்கை தீர்மானம் எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தி தூத்துக்குடியில் இன்று அடையாள கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் நடைபெற்றது.
தூத்துக்குடி மறைமாவட்டம், தோழமை திருச்சபை தலைவர்கள், சமய நல்லிணக்க தோழர்கள் ஆகியோர் இணைந்து சின்னக்கோயில் பேராலய வளாகத்தில் வியாழன் காலை 9.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்வில் ...அதிமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் முன்னாள் அமைச்சர் சித செல்லப்பாண்டியன் அஜிதா ஆர்கனல்..உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஆனால்? ஆளும் திமுக கட்சி இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
நேரம்: காலை 9.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை
இடம்: சின்னக்கோயில் பேராலய வளாகம், தூத்துக்குடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக