#தூத்துக்குடி லீக்ஸ்
#Tamil Nadu updates,
செய்தி புகைப்படங்கள்
அருணன் செய்தியாளர்.
## நீதிக்காக போராடிய வழக்கறிஞர் சுப்பு முத்து ராமலிங்கத்திற்கு பாராட்டு விழா
தூத்துக்குடி, ஏப்ரல் 14:
தூத்துக்குடி தாள முத்து நகர் காவல் நிலையம் வின்சென்ட் லாக்கப் டெத் வழக்கில் காவல்துறை அதிகாரிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்த சட்டப்போராளி, வழக்கறிஞர் சுப்பு முத்து ராமலிங்கத்திற்கு இன்று 14-04-2025 தூத்துக்குடியில் சிறப்பு பாராட்டு விழா நடைபெற்றது.
24 ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் வின்சென்ட் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், மிகவும் நேர்மையாக எந்தவிதமான நெருக்கடிக்கும் அஞ்சாமல் போராடி, DSP, ஆய்வாளர் உள்ளிட்ட ஒன்பது காவலர்களுக்கு ஆயுள் தண்டனை பெற்றுத் தந்த வழக்கறிஞர் சுப்பு முத்து ராமலிங்கத்தின் சேவையை பாராட்டும் வகையில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
![]() |
சட்டப்போராளி, வழக்கறிஞர் சுப்பு முத்து ராமலிங்கத்திற்கு சால்வை அணிவித்து நினைவு கேடயம் வழங்கினார் மூத்த வழக்கறிஞர் செங்குட்டுவன் |
தூத்துக்குடி ரோச் விக்டோரியா ஹாலில் நடைபெற்ற இந்த பாராட்டு விழாவில், சமூக போராளிகள் மற்றும் வழக்கறிஞர்கள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை மாஸ் ஆம்புலன்ஸ் சர்வீஸ் நிறுவனத்தின் தமிழ் செல்வன் ஏற்பாடு செய்திருந்தார். மேலும், மாற்று திறனாளி முன்னேற்ற நல்வாழ்வு சங்கத்தின் மருத பெருமாள், ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு சமூக போராளிகள் மற்றும் தூத்துக்குடி வழக்கறிஞர்கள் ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய பலரும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கையின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட மக்களுக்காக நீதி கேட்டு போராடிய வழக்கறிஞர் சுப்பு முத்து ராமலிங்கத்தின் சேவையை பாராட்டினர். அதிகார வர்க்கத்திற்கு எதிராக நீதிக்காக குரல் கொடுத்த அவரது தைரியமும், நெஞ்சுரமும் சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டது.
அதிகாரத்தின் முன் அஞ்சாமல் நின்று, பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுப்பவர்களே உண்மையான சமூக போராளிகள் என விழாவில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
நடந்தது என்ன??
![]() |
மரணமடைந்த வின்சென்ட் |
வின்சென்ட் (36) தூத்துக்குடி மேல அலங்காரத்தட்டு உப்பள தொழிலாளர்.
1999 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 அன்று, அவரை தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் உள்ள போலீசார், நாட்டுக் குண்டுகளை சட்டவிரோதமாக வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.
அடுத்த நாள், செப்டம்பர் 18 அன்று, காவல் நிலையத்தில் அவருக்கு நடந்த துன்புறுத்தலின் காரணமாக அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, வின்சென்டின் உறவினர்கள் அவரது உடலைப் பெற மறுத்து, சம்பந்தப்பட்ட போலீசாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் (RDO) விசாரணையின் அடிப்படையில், 11 போலீசாருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தூத்துக்குடி தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் 1999 ஆம் ஆண்டு நடந்த விசாரணை கைதி வின்சென்ட் மரணம் தொடர்பான வழக்கில், 2025 ஏப்ரல் மாதத்தில், 9 போலீசாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில், அரசு தரப்பில் வழக்கறிஞராக ஆனந்த் கேபிரியல் செயல்பட்டார் .
வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதி எம். தாண்டவன் தலைமையில், 13 சாட்சிகளின் வாக்குமூலங்கள் மற்றும் 38 ஆவணங்கள்
பரிசீலிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது.
இந்த வழக்கில், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் ஸ்ரீதரன், வின்சென்ட் அதிக அளவு மது அருந்தியதால் இறந்ததாக பொய்யான அறிக்கை சமர்ப்பித்தது நீதிமன்றத்தில் ...?
இந்த வழக்கின் தீர்ப்பு, நீண்ட காலம் நீதி தேடினர் வின்சென்ட் குடும்பத்தினர்...
இவர்களுக்காக இந்த வழக்கில் சுப்பு முத்து ராமலிங்கம் களத்தில் நின்று வாதாடினார்.
விசாரணையின் போது, ராமகிருஷ்ணன் உட்பட ஒன்பது பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர்;
இரண்டு பேர் விடுவிக்கப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம்,
கடந்த 1999 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடந்த வின்சென்ட் என்பவரின் காவல் நிலைய மரணம் தொடர்பாக, 2025 ஏப்ரல் 5 அன்று தீர்ப்பு வழங்கியது.
இந்த வழக்கில், ஸ்ரீவைகுண்டம் துணை காவல் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் உட்பட ஒன்பது போலீசார் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், ஒவ்வொருவருக்கும் ₹10,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
வின்சென்ட் காவல் நிலையம் மரண வழக்கில்... தண்டனை பெற்றவர் பெயர் பதவி விபரம்
1. எஸ். ராமகிருஷ்ணன் அந்த நேரத்தில் துணை காவல் கண்காணிப்பாளர் (DSP), ஸ்ரீவைகுண்டம்
2. சோமசுந்தரம் - நில அபகரிப்பு பிரிவு ஆய்வாளர்
3. ஜெயசேகரன் - உதவி ஆய்வாளர்
4. ஜோசப் ராஜ் - காவலர்
5. பிச்சையா - சிறப்பு உதவி ஆய்வாளர்
6. செல்லத்துரை - காவலர்
7. வீரபாகு - உதவி ஆய்வாளர் (ஓய்வு)
8. சுப்பையா காவலர்
9. பாலசுப்பிரமணியம் (காவலர்)
இந்த தீர்ப்பு, 25 ஆண்டுகளுக்குப் பிறகு நீதி வழங்கப்பட்ட ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. , இது வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு என்றும், நீண்ட காலத்திற்குப் பிறகு நீதி கிடைத்ததாகவும் வழக்கறிஞர்கள் தரப்பில் குறிப்பிட்டு இந்த வழக்கில் நீதிக்காக வாதாடிய வெற்றி பெற்ற வழக்கறிஞர் சுப்பு முத்து ராமலிங்கம் அவரை பாராட்டி வருகின்றனர்.
சிலரின் பெரிதும் ஆதங்கமாக....!!!
அந்த தருணத்தில்...
தூத்துக்குடி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆக இருந்தவர் ராஜேஷ் தாஸ்
எஸ்பி- யின் தனிப்படை எஸ் ஜ ஆக ராமகிருஷ்ணன் இருந்து இருந்து இருக்கிறார் அவர் இட்ட கட்டளைக்கெல்லாம் அடி பணிந்து இருந்து இருக்கிறார்
இவரும் அம்பு வாகவும் அங்கு டூட்டி பாத்ததால் சிலர் தண்டனையும் பெற்றுள்ளார்களாம்.
"ஆட்ட நாயகன்
"அவரின் அந்த மாதிரி விஷயம் எல்லாம் அத்துப்படி யான ஆள் என்பது இப்போது அனைவரும் சொல்லும் செம பேரு!!!
அப்போதே தூத்துக்குடி விஜபி ஒருவரை இரவு நேரத்தில் அதற்காக இவர் முலம் விசாரணைக்கு ? அழைத்து மொக்கை வாங்கியும் அப்போதிருந்த டிஜஜி ஜாங்கிட் வரை எஸ் பி யின் சேட்டை மேட்டர் தகவல் சென்று கண்டித்தும் உள்ளாராம்."
வின்சென்ட் வசித்து வந்தது தூத்துக்குடி மேல அலங்கார தட்டு என்றதும் ...தூத்துக்குடி பிரபலம் தேவேந்திர குல வேளாளர் தலைவர் பசுபதி பாண்டியன் ஆதரவாளர் என்று பார்வையில் முடுக்கி யுள்ளார்கள்
அப்போது தூத்துக்குடி மாவட்டத்திற்கே சூத்திர காரர் ஆக செயல் பட்ட எஸ் பி ராஜேஷ் தாஸ் இருந்தார் .
இதில் எப்படியப்பா காணாமல் போனார் என்பது தான் தூத்துக்குடி பொது மக்களின் ஹாட் டாக்
Photo news by Arunan journalist
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக