செவ்வாய், 15 ஏப்ரல், 2025

நிர்வாக இயக்குனரைக் கண்டித்தும் – தூத்துக்குடி அரசு விரைவு போக்குவரத்து ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அவலம் பயணிகள் தினம் அவதி தமிழக அரசு இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

Tamil Nadu updates,

Photo news by Arunan journalist 

தூத்துக்குடி லீக்ஸ் செய்தி - 15.04.2025

நிர்வாக இயக்குனர் மோகன் கண்டித்தும் – தூத்துக்குடி அரசு விரைவு போக்குவரத்து ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் இன்று (15.04.2025) காலை 10 மணியளவில் அரசு விரைவு போக்குவரத்து கழக வாயிற் பகுதியில், ஊழியர்கள் திரண்டு நிர்வாக இயக்குனர் மோகனை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.




அரசு விரைவு போக்குவரத்துத் துறையில் பணியாற்றும் ஊழியர்கள், நிர்வாக இயக்குனரின் அலட்சியமும், ஊழியர் நலன்கள் மீதான புறக்கணிப்பும் தொடர்வதால், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.





பணியிடங்களை நிரப்புதல், சம்பள விஷயங்கள் மற்றும் பாதுகாப்பு உத்தேசங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்ட இந்த போராட்டத்தில், இயக்குனர் மோகன் மீது கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர்கள்:

  • ஜி. தர்மாராஜ் – பனிமனை தலைவர் (CITU)
  • ஆர். பிச்சைமணி – மாநில துணைச் செயலாளர் (CITU)
  • டென்சிங் – Railway Transport Leader (CITU)
  • பேச்சிமுத்து – தூத்துக்குடி மாவட்ட தலைவர்
  • பூபதி – மாநில நிர்வாக குழு உறுப்பினர், Riwa ஒய்வூதியர் அமைப்பு, தூத்துக்குடி மாவட்ட செயலாளர்
  • கதிரேசன் நல்ல பெருமாள் – (ஒய்வூதியர்)
  • பீட்டர் அருள்ராஜ் – அரசு போக்குவரத்து நிர்வாகி, CITU
  • ஜோசப் – அரசு விரைவு போக்குவரத்து கழகம், CITU

நன்றியுரை:
மாயக்குமார் – பணிமனை செயலாளர் வழங்கினார்.

SETC நிர்வாக இயக்குனர் மோகன் அராஜகம்!!! பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மற்றும் மாற்று திறனாளி கள் கொதிப்பு தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் 

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் .... சென்னை பெங்களூர் மற்றும் பேருந்துகள் அங்கு உள்ள நடை மேடை கவுண்டரில் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் ???

ஆனால் ?

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் வாயில் பகுதியில் விபத்து உருவாகும் விதத்தில் குறுக்கு நெருக்கமாக நிறுத்தி பயணிகள் ஏற்றி வருகின்றனர் 

இதனால் மாற்று திறனாளி மற்றும் முதியோர் சிறு குழந்தைகள் ஒரு வித பயமும் சிரமம் படுகின்றன 

பேருந்து நிற்கும் இடத்தில்... தனியார் கார் நிற்கும் இடமாக மாறியுள்ளது தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் 


தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் SETC நடைமேடை கவுண்டரில்   தனியார் கார் கள் நிறுத்தி உள்ளதை இப்போது காணலாம் 

இது குறித்து மாண்புமிகு சமுக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அவருக்கு தகவல் தெரிவித்ததும் டிடிசி மற்றும் எஸ்சிடிசி நிர்வாக மேலாளர்களை கண்டித்து அறிவுரை வழங்கினார்.

 இதன் பின்னர் சிட்டி பஸ்கள் எழுத பட்ட இடத்தில் நிறுத்தாமல்..

 அரை குறையாக நடைமேடை கவுண்டரில் நிறுத்தி வருகின்றனர் இன்னும் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் வாயிற் பகுதியில் நின்று பயணிகளை ஒட்டுநர் நடத்துனர் அழைத்து  ஏற்றி வருகின்றனர்  பேரவலம் இந்த ஆட்சிக்கு இதனால் கெட்ட பெயர் வந்து சேர்கிறது.

"தமிழகத்தில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்களிலும் நடைமேடை கவுண்டரில் நிறுத்தி தான் 

பயணிகளை ஏற்றிச் செல்வார்கள் பேருந்து நிலையத்தில் வழியில் பயணிகள் ஏற கை ✋ காட்டினாலும் நின்று ஏற்றி மாட்டார்கள் ஏனெனில் பின் வரும் பேருந்து விபத்து ஏற்படும்"

 

ஆனால் ? தூத்துக்குடியில் தலைகீழ் பேருந்து நிலையம் உள்ளே பிற பேருந்து வரும் வழியில் பயணிகள் ஏற கூவி கொண்டு ஏற்றி செல்கின்றனர்.

 

"தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் மட்டுமே  

 சிட்டி மற்றும் மப்சல் நிர்வாக மேலாளர்கள் ....

மக்ரோன் மட்டும் லஞ்சத்திற்கு ஆசைப்பட்டு பொது மக்கள் மற்றும் அப் பகுதியில் உள்ள வியாபாரிகள் மற்றும் மாற்று திறனாளிகள் எதிராக நடந்து வருகின்றன இவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு...

- தூத்துக்குடி லீக்ஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக