வெள்ளி, 7 மார்ச், 2025

மகளிர் தினத்தில் தங்கள் மனைவியருக்கு நன்றி தெரிவிப்பு தூத்துக்குடியில் மக்கள் சிவில் உரிமை கழகத்தின் மகளிர் தின விழா சிறப்பு!!!

மக்கள் சிவில் உரிமை கழகத்தின் மகளிர் தின விழா சிறப்பாக நடைபெற்றது

மகளிர் தின விழா இவ்விழாவில் சிறப்பு அம்சமாக

தங்கள் மனைவியருக்கு நன்றி தெரிவித்து கெளரவ படுத்தினர்!!!



இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி: மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் (PUCL) சார்பில் மகளிர் தின விழா அண்ணா நகர் தங்கம் நடுநிலைப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட செயலாளர் தெர்மல் ராஜா மாவட்ட தலைவர் முனைவர் செல்வராஜ் தலைமையிலையும், மாநில குழு உறுப்பினர் பேராசிரியை பாத்திமா பாபு ஒருங்கிணைப்பிலும் நடைபெற்றது.



மாவட்ட செயலாளர் தெர்மல் ராஜா வரவேற்ற.. இந்த நிகழ்ச்சியில், பள்ளி சிறுமிகள் பெண் உரிமைகள் மற்றும் மகளிர் தினத்தின் முக்கியத்துவத்தை பேசினர்.



 பள்ளியின் நிர்வாக குழு தலைவர் ஈஸ்டர் ராணி விழா ஏற்பாட்டில் முக்கியப் பங்கு வகித்தார். பள்ளி ஆசிரியைகள் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். 

பள்ளி குழந்தைகள் சிலம்பம், நடனம் மூலம் பெண்களின் சக்தியை பறைசாற்றினர். 


மக்கள் சிவில் உரிமை கழக துணைத்தலைவர் விக்னேஷின் புதல்வி தியாஸ்ரீ பாடிய பெண் உரிமை பாடல் அனைவரின் பாராட்டைப் பெற்றது.

மகளிர் தின விழா வில் சிறப்பு அம்சம் 

தங்கள் மனைவியருக்கு நன்றி தெரிவித்து கெளரவ படுத்தல்!!!

விழாவின் சிறப்பு அம்சமாக, கழக உறுப்பினர்கள் மாஸ் தமிழ்ச்செல்வன், அந்தோணி, நவமணி தங்கராஜ், பூசைதுரை, கிதர் பிஸ்மி ஆகியோர் தங்களது துணைவியரை அழைத்து வந்து, அவர்கள் தங்கள் வெற்றிக்கான காரணமாக இருப்பதை பாராட்டி நினைவுப்பரிசுகள் வழங்கினர்.


தூத்துக்குடி மகளிருக்கு பெருமை சேர்த்த பேரா. பாத்திமா பாபுவிற்கு மகளிர் தின நினைவு பரிசு

பண்டராம்பட்டியில் இருந்து கலந்துகொண்ட சகாயத்தின் மனைவி, தூத்துக்குடி மகளிருக்கு பெருமை சேர்த்த பேரா. பாத்திமா பாபுவிற்கு மகளிர் தின நினைவு பரிசு வழங்கினார்.







முழுக்க முழுக்க மகளிரை பெருமைப்படுத்தும் வகையில் நடைபெற்ற விழாவிற்கு செபஸ்டியான், சம்சுதீன், கண்ணன் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் மாவட்ட பொருளாளர் சம்சுதீன் நன்றி தெரிவித்தார்.

Photo news by Arunan journalist  

8-3-2025

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக