தூத்துக்குடியில் அண்ணா மண்டபத்தில் மகளிர் தின விழாகொண்டாட்டம்
தூத்துக்குடி: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி அறிஞர் அண்ணா மண்டபத்தில் சிறப்பு விழா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வாக, சென்னையில் நடைபெற்ற மகளிர் தின விழாவின் நேரலை ஒளிபரப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், கூடுதல் கலெக்டர் ஜஸ்வர்யா, ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகய்யா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். மகளிர் தின விழாவை காண மண்டபம் முழுவதும் பெண்கள் திரண்டிருந்தனர்.
![]() |
செல்வி ஜஸ்வர்யா கூடுதல் கலெக்டர் |
![]() |
ஒட்டப்பிடாரம் சண்முகய்யா எம்எல்ஏ |
![]() |
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி |
![]() |
மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் |
சென்னையில் நடைபெற்ற மகளிர் தின விழா
சென்னையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பெண்களுக்கான பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்து தொடங்கி வைத்தார். இதில், பெண்களின் பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்தும் திட்டங்கள் முக்கியமாக இடம்பெற்றன.
முதலமைச்சர் தனது உரையில், 'பெண்கள் முன்னேற்றம் பெற்றால்தான் சமூகமும் வளர்ச்சி அடையும்' எனக் குறிப்பிட்டு, தி.மு.க. அரசு பெண்களின் உரிமைகள், கல்வி, தொழில் மற்றும் நலத்திட்டங்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்தார்.
பிங்க் ஆட்டோ சேவை அறிமுகம்
பெண்களின் பாதுகாப்பு மற்றும் வசதியான போக்குவரத்துக்காக 'பிங்க் ஆட்டோ' சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. முதற்கட்டமாக, 250 பெண் ஓட்டுநர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஆட்டோக்கள் வாங்க ஒரு லட்சம் ரூபாய் வரை அரசு மானியம் வழங்கப்பட்டது. இது, பெண்களுக்கு சொந்தமாக வருமானம் ஈட்டும் வழியை உருவாக்கும் முக்கிய திட்டமாக கருதப்படுகிறது.
மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் உதவி
மகளிர் சுயஉதவிக் குழுக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், ரூ.3,000 கோடி மதிப்பீட்டில் வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கப்பட்டன.
இதன் மூலம், தொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்கு தேவையான நிதி ஆதரவு கிடைக்கும்.
மேலும், மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. இதன்மூலம், அவர்கள் அரசின் பல்வேறு நலத்திட்டங்களை எளிதில் பெற முடியும்.
தோழி மகளிர் விடுதி திட்டம் விரிவாக்கம்
பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பான தங்குமிட வசதிகளை வழங்கும் 'தோழி' மகளிர் விடுதி திட்டம் விரிவாக்கம் செய்யப்படுவதாக முதலமைச்சர் அறிவித்தார்.
மகளிருக்கு விருதுகள் வழங்கல்
மகளிர் தின விழாவில், விவசாயம், தொழில்முனைவு, மருத்துவம், கல்வி, கலை, அரசியல் போன்ற துறைகளில் சிறந்து விளங்கிய மகளிருக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
முக்கிய தலைவர்கள் உரை
முதலமைச்சருடன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மகளிர் உரிமை மற்றும் நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், சென்னை மேயர் ப்ரியா ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டு மகளிர் முன்னேற்றம் குறித்து உரையாற்றினர்.
தூத்துக்குடியில் மகளிர் தின விழா நிறைவு
தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மகளிரின் சமூக, பொருளாதார முன்னேற்றம் குறித்து பேசினர். பெண்கள் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்முனைவு ஆகியவற்றில் முன்னேற அரசு வழங்கும் திட்டங்களை முறையாக பயன்படுத்துமாறு அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
நிகழ்ச்சி முடிவில், சிறந்த பெண்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழா முடிவில், பெண்கள் உற்சாகமாக கலந்து கொண்டு மகளிர் தின வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
இவ்வாறு, தூத்துக்குடியில் மகளிர் தின விழா சிறப்பாக நடைபெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக