Tamil Nadu updates
Photo news by Arunan journalist
தூத்துக்குடி: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கழகத்தின் சார்பில் சிறப்பான விழா நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் அற்புத ராஜ் தலைமையில் நடந்த இவ்விழாவில், கழகத்தின் மகளிர் முன்னணி உறுப்பினர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
விழாவில் கட்சி தலைவர் எர்ணாயூர் நாராயணன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, மகளிரின் சாதனைகளை பாராட்டி உரையாற்றினார்.
பின்னர் மக்கள் நல்வாழ்வு பணியாளர்களுக்கு சேலை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, இனிப்பு மற்றும் கேக் வெட்டி மகளிர் தினத்தை உற்சாகமாக கொண்டாடினர்.
வீடியோ பார்க்க...
மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் கலை இலக்கிய அணி செயலாளர் அந்தோனி பிச்சை பட்டிமன்றம் பேச்சாளர் பசுபதி மகளிர் அணி சந்திரா,குருவம்மா மற்றும் கண்டிவேல் சகாயராஜ் அருள்ராஜ் சங்கர் முருகன் முத்துகுமார் முத்து செல்வம் உதயசூரியன் சந்தணகுமார் சங்கரன் மாலை சூடி ராஜா ஜெயபால் மதி செல்வராஜ் சதீஷ் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பல்வேறு மகளிர் உரிமைகள், சமூக முன்னேற்றம் குறித்த விழிப்புணர்வு உரைகள் நிகழ்த்தப்பட்டன.
மகளிர் முன்னேற்றம் மற்றும் சமத்துவம் குறித்து விழிப்புணர்வை அதிகரிக்க இத்தகைய நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக