தூத்துக்குடியில் மனிதநேய மக்கள் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி:
மனிதநேய மக்கள் கட்சியின் (மமக) தூத்துக்குடி மாவட்டம் சார்பாக, வக்ஃப் திருத்தச் சட்டத்தை எதிர்த்து 27.02.2025 வியாழக்கிழமை மாலை 5 மணி அளவில் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய தலைமைக் கண்டன உரையாளர்கள், "மோடி அரசு இஸ்லாமியர்களுக்கு எதிராக அவர்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றும் உள்நோக்கத்தோடு இந்த வக்ஃப் திருத்தச் சட்டத்தை கொண்டு வந்துள்ளது" எனக் கடுமையாக கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், நாடாளுமன்ற கூட்டுக்குழு திருத்தங்களை பரிந்துரை செய்த பின்னரும், மோடி அரசு எந்த மாற்றமும் செய்யாமல் மசோதாவை தாக்கல் செய்திருப்பது எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை பெற்றுள்ளதாக உரையாற்றினர். இந்த சட்டம் திரும்ப பெறப்படும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் வலியுறுத்தினர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தைப் போலவே, இஸ்லாமியர்கள் இந்த புதிய சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்த தூண்ட முயற்சிக்க வேண்டாம் என அவர்கள் கேட்டுக் கொண்டனர். மோடி அரசு தனது ஆட்சி அதிகார ஆணவத்தால் இந்த வக்ஃப் திருத்தச் சட்டத்தை கடைபிடிக்க முயன்றால், எதிர்ப்பும் அதிகரிக்கும் என எச்சரித்தனர்.
"வெறுப்பு அரசியல் செய்கிற மோடி அரசு, சகோதரத்துவத்துடன் வாழும் இந்து-முஸ்லிம் மக்களிடம் வன்முறையை தூண்டும் முயற்சிகளை கைவிட்டு, மக்கள் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் முன்னேற்றமான திட்டங்களை செயல்படுத்த வேண்டும்" என அவர்கள் வலியுறுத்தினர். இந்த வக்ஃப் திருத்தச் சட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆர்ப்பாட்ட தலைவர்கள் மற்றும் உரையாற்றியோர்:
தலைமை:
- H.M. அகமது இக்பால் (மாவட்டத் தலைவர், மமக)
முன்னிலை:
- சுலைமான் (மாவட்ட துணைச் செயலாளர், மமக)
துவக்க உரை:
- அஸ்மத் உசேன் (மாவட்டச் செயலாளர், மமக)
- யூசுப் (மாவட்டச் செயலாளர், தமுமுக)
- மோத்தி முஸ்ஸம்மில் (மாநிலச் செயற்குழு உறுப்பினர்)
கண்டன உரை:
- ஜோசப் நிலெஸ்கோ (தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர், மமக)
- குமரி காதர் மைதீன் (தலைமை பிரதிநிதி, மமக)
- ஆசாத் (தலைமை பிரதிநிதி, மமக)
தோழமைக் கட்சிகளின் கண்டன உரை:
- முருக பூபதி (மாநகரச் செயலாளர், மதிமுக)
- மாடசாமி (மாவட்ட அலுவலகச் செயலாளர், சிபிஐ)
- ஞானசேகர் (மாநில பொதுக்குழு உறுப்பினர், சிபிஐ)
- பால் பிரபாகரன் (பரப்பரச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்)
- சம்சுகனி (மாவட்டத் தலைவர், ஏகத்துவ ஜமாத்)
- ஜான்பிராயர் (மாவட்ட பொறுப்பாளர், சமம் குடிமக்கள் இயக்கம்)
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர்:
மாவட்ட நிர்வாகிகள்:
- ஆசிக் (மாவட்ட துணைச் செயலாளர், தமுமுக)
- செண்பகராஜ் (மாவட்ட துணைச் செயலாளர், மமக)
- சையத் அலி (மாவட்ட துணைச் செயலாளர், தமுமுக)
மாவட்ட அணி நிர்வாகிகள்:
- அப்சல் (ஊடகப்பிரிவு மாவட்டச் செயலாளர், மமக)
- சம்சுதீன் (மாவட்டச் செயலாளர், மனித உரிமை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு பேரவை)
- பிரவீன் (மாவட்டச் செயலாளர், மீனவர் அணி)
மாநகர நிர்வாகிகள்:
- A. அப்பாஸ் (மாநகரச் செயலாளர், மமக)
- K. அப்பாஸ் (மாநகரச் செயலாளர், தமுமுக)
- சம்சுதீன் (மாநகர துணைச் செயலாளர், தமுமுக)
மாநகர மற்றும் பேரூராட்சி நிர்வாகிகள்:
- செய்து அலி (கயத்தாறு பேரூராட்சி தலைவர்)
- ஜபருல்லாகான் (பொருளாளர்)
மாநகர அணி நிர்வாகிகள்:
- உசைன் அலி (மனித உரிமை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு பேரவை மாநகரச் செயலாளர்)
- மெட்ரோ ஷேக் (வணிகர் அணி மாநகரச் செயலாளர்)
- நாகூர் பிச்சை (மாநகரச் செயலாளர், தொழிற்சங்கம்)
நன்றியுரை:
- அப்துல் சமது (மாநகரத் தலைவர், மமக)
இந்த கண்டன ஆர்ப்பாட்டம் மனிதநேய மக்கள் கட்சி, தூத்துக்குடி மாவட்டம் சார்பாக சிறப்பாக நடத்தப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக