2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருதுகளை வழங்கிய விழா
சென்னை, மார்ச் 1: 2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருதுகளை வழங்கும் விழா இன்று காலை 9.30 மணிக்கு சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்றது.
விழாவில் தமிழக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்கள் சிறப்புரையாற்றி, தமிழ் மொழி மற்றும் பண்பாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக பணியாற்றும் 38 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியின் தொடக்கவுரையை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் . வே. ராஜாராமன், இ.ஆ.ப. நிகழ்த்தினார்.
வரவேற்புரை தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ஒளவை அருள் வழங்கினார்.
நிகழ்ச்சியின் நிறைவில் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் த தே. ஜெயஜோதி நன்றியுரை கூறினார்.
தமிழ்ச்செம்மல் விருது பெற்றோர் – 2023 பட்டியலில் முக்கியமாக
தூத்துக்குடி: நெய்தல் யூ. அண்டோ
சென்னை: இரா. பன்னிருகை வடிவேலன்
சேலம்: சோ. வைரமணி (எ) கவிஞர் கோனூர் வைரமணி
தஞ்சாவூர்: மருத்துவர் ந. ஜூனியர் சுந்தரேஷ்
அரியலூர்: புலவர் க.ஐயன்பெருமாள்
இராணிப்பேட்டை: முனைவர் க.பன்னீர் செல்வம்
இராமநாதபுரம்: . நீ. சு. பெருமாள்
ஈரோடு:. து. சுப்ரமணியன்
கடலூர்: . சி. ஆறுமுகம்
கரூர்: முனைவர் க. கோபாலகிருஷ்ணன்
கள்ளக்குறிச்சி: . ச. பிச்சப்பிள்ளை
காஞ்சிபுரம்: முனைவர் வ. இராயப்பன், முனைவர் த. ராஜீவ் காந்தி
கிருஷ்ணகிரி: முனைவர் அ. திலகவதி
கோயம்புத்தூர்: த. சு. தர்மன்
சிவகங்கை: முனைவர் உ. கருப்பத்தேவன்
செங்கல்பட்டு: புலவர் வ. சிவசங்கரன்
தருமபுரி: . மா. சென்றாயன்
திருச்சிராப்பள்ளி: முனைவர் இர. கிருட்டிணமூர்த்தி, . இராச. இளங்கோவன்
திருநெல்வேலி: அ. முருகன்
திருவண்ணாமலை: புலவர் நா. வீரப்பன்
திருவள்ளூர்: திரு. சு. ஏழுமலை
திருவாரூர்: முனைவர் வி. இராமதாஸ்
தென்காசி: திரு. செ. கண்ணன்
தேனி: முனைவர் மு. செந்தில்குமார்
நாகப்பட்டினம்: கவிஞர் நாகூர் மு. காதர் ஒலி
நாமக்கல்: திருமதி ப. கமலமணி
நீலகிரி: புலவர் இர. நாகராஜ்
புதுக்கோட்டை: திரு. இரா. இராமநாதன்
பெரம்பலூர்: திரு. மு. சையத்அலி
மதுரை: புலவர் இரா. செயபால் சண்முகம்
மயிலாடுதுறை: திரு. க.இளங்கோவன் (எ) நன்னிலம் இளங்கோவன்
விருதுநகர்: திரு. கா.காளியப்பன்
விழுப்புரம்: திரு. இரா. முருகன்
வேலூர்: திரு. இரா. சீனிவாசன்
இந்த விருது பெற்றவர்களின் தமிழ் பணிகள், இளைய தலைமுறைக்கு ஊக்கமாக அமையும் என்று விழாவில் உள்ள தலைவர்கள் பாராட்டினார்கள்.
Tamil Nadu updates,
- தூத்துக்குடி லீக்ஸ் செய்தியாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக