அமலி நகர் மீனவர்களுக்கு ஆதரவாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
இது பற்றிய செய்தியாவது
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அமலி நகர் மீனவ மக்கள் 25 நாட்களாக தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தமிழக அரசு ரூ. 58 கோடி ஒதுக்கீட்டில் பணிகள் நடைபெறுகின்றன,
ஆனால் தூண்டில் வளைவு அமைப்பதற்குப் பதிலாக தூண்டில் பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த விவகாரத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன், அமலி நகர் மீனவர்களுக்கு ஆதரவாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார்.
தூண்டில் வளைவு தான் வேண்டும்
தூண்டில் பாலம் அல்ல?
அவர் வலியுறுத்தியது, மீனவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்பதாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக