புதன், 11 டிசம்பர், 2024

தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கிய பெண்களை மருத்துவமனையில் அமைச்சர் கீதாஜீவன் சந்தித்து ஆறுதல்

Tamil Nadu updates,

Photo news by sunmugasuthram Reporter 

மின்சாரம் தாக்கிய பெண்களை மருத்துவமனையில் அமைச்சர் கீதாஜீவன் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

இது பற்றிய செய்தியாவது 


தூத்துக்குடி: தூத்துக்குடி அம்பேத்கர் நகர் பகுதியில், ஸ்டெம்பார்க் அருகே, இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த தேன்மொழி மற்றும் பொன் முத்துமதி ஆகிய இருவரும் மின்சாரம் தாக்கி காயமடைந்தனர்.



மின்சார கம்பம் எதிர்பாராத விதமாக சாய்ந்து விழுந்ததின் காரணமாக, கம்பி இருசக்கர வாகனத்தின் மீது விழுந்து மின்சாரம் தாக்கியது. பின்னால் அமர்ந்திருந்தவர் குதித்து தப்பினார். அருகிலிருந்த பொதுமக்கள் உடனடியாக அவர்கள் மீது பட்ட மின்சார கம்பியை துணியால் அகற்றி, இருவரையும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.


தற்போது, அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை பார்வையிட சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேரில் சென்றார். அவர்களுடன் பேசிக்கொண்டு, அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் ஆலோசித்தார். 


மேலும், உறவினர்களுக்கு ஆறுதல் கூறி, பாதிக்கப்பட்டவர்களின் உடல் நலன் மேம்பட அரசு சார்பில் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு உறுதியளித்தார்.


இதன்போது, திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி, கவுன்சிலர் நாகேஸ்வரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக