வியாழன், 21 நவம்பர், 2024

எடப்பாடியார் திறப்பு அன்னை ஜானகி எம்.ஜி.ஆர் திருவுருவ படம் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

சென்னை அதிமுக தலைமைக் கழகத்தில் ஜானகி எம்.ஜி.ஆர் திருவுருவப் படம் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின் போது திறந்து வைக்கப்படும். இந்நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமை வகிக்கிறார். ஜானகி ராமசந்திரனின் நினைவினை சிறப்பிக்கவும் அவரின் பங்களிப்புகளை போற்றவும் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.



எம்.ஜி.ஆர் மன்ற முன்னாள் தலைவர் மு.பாலகிருஷ்ணன் தகவல்

நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த

எம்.ஜி.ஆர் மன்ற முன்னாள் தலைவர் மு.பாலகிருஷ்ணன் தகவல் தெரிவித்தார்.

இது பற்றிய செய்தியாவது 

தூத்துக்குடி நவ 22

        அ.தி.மு.க.

தலைமை அலுவலகத்தில் அன்னை ஜானகி எம்.ஜி.ஆர் திருவுருவ படம் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திறந்துவைக்கப்படும் என்பதை  நெல்லை, தூத்துக்குடி மாவட்ட

ஒருங்கிணைந்த

எம்.ஜி.ஆர் மன்ற முன்னாள்தலைவர் மு.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

       சென்னை

அ.தி.மு.க.தலைமை அலுவலக கட்டிடம் ஜானகி அம்மையாருக்கு சொந்தமானது. 

புரட்சி தலைவர் எம்ஜிஆர்!!!

அந்த கட்டிடத்தை மறைந்த முதல்வர், அதிமுக பொதுச்செயலாளர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் வேண்டுகோளுக்கு இணங்க அதிமுக கட்சி க்கு இலவசமாக வழங்கினார்.

சொந்த கட்டிடம் 🏢

 தனது சொந்தகட்டிடத்தை அதிமுக கட்சிக்கு வழங்கிய அன்னை ஜானகி எம்.ஜி.ஆர் திருவுருவ படம் சென்னைஅ.தி.மு.க. 

தலைமை கழக அலுவலகத்தில் இதுவரை வைக்கப்படவில்லை என்பதுஅ.தி.மு.கவினரிடம் அதிருப்தியாக இருந்து வந்தது.

வலியுறுத்தல்!!!

        தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் அன்னை ஜானகி எம்.ஜி.ஆர் திருவுருவ படத்தை திறந்து வைக்க மூத்த எம்.ஜி.ஆர் மன்றமுன்னோடிகள் வலியுறுத்தி வந்தனர்.

        அன்னை ஜானகி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு பிறந்தநாள் இந்த மாதம் வருவதை முன்னிட்டு வருகிற 24ந்தேதி அ.தி.மு.க.கட்சி தலைமை சார்பில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.



 ஜானகி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை...

 முன்னிட்டு அன்னை ஜானகி எம்.ஜி.ஆர் திருவுருவ படத்தை சென்னை அ.தி.மு.க.தலைமை அலுவலகத்தில் திறந்து வைக்க வலியுறுத்தி கழக  பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி

மற்றும்

அன்னை ஜானகி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா ஒருங்கிணைப்பாளரும், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளருமான பொன்னையன் ஆகியோருக்கு  மனு அனுப்பியிருந்தார்.

        கடம்பூர் ராஜு எம்எல்ஏ!!! 

அந்த கடித நகல் அன்னை ஜானகி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா குழு உறுப்பினரும்,கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜுக்கு அனுப்பப்பட்டது.

எடப்பாடியார் திறப்பு!!!

'         நேற்று முன்தினம் நூற்றாண்டு பிறந்தநாள் விழா உறுப்பினரும்,எம்.எல்.ஏ  கடம்பூர் ராஜு  நெல்லை, தூத்துக்குடி மாவட்டஒருங்கிணைந்த

எம்.ஜி.ஆர் மன்ற முன்னாள் தலைவர் மு.பாலகிருஷ்ணனிடம் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவில் கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் திறந்துவைக்கும், அன்னை ஜானகி எம்.ஜி.ஆர் திருவுருவ படம் சென்னைஅ.தி.மு.க.

தலைமை அலுவலகத்தில் வைக்கப்படும் என்பதை தெரிவித்ததோடு,, விழாவில் பங்கேற்கவும் கேட்டுக்கொண்டார்.



       மேற்கண்ட தகவலை  நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த

எம்.ஜி.ஆர் மன்ற முன்னாள்தலைவர்

மு.பாலகிருஷ்ணன் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக