புதன், 25 செப்டம்பர், 2024

பக்கிள் ஓடை சீரமைப்பு பணி.அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

 ▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃326--9- 2024 photo news 

by sunmugasunthram Reporter 

தூத்துக்குடி பக்கிள் ஓடையில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சீரமைக்கும் பணியை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார்.




இது பற்றிய செய்தியாவது:-

     தூத்துக்குடி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி முழுவதும் சுழற்சி முறையில் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்வது மட்டுமின்றி எதிர்வரும் மழைகாலங்களில் முன்னெச்சாிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் பல்வேறு பணிகளை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். 

மழைநீர் 

வடியாத நிலை சீரமைப்பு!!!

     இந்நிலையில் கே.வி.கே நகர் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தின் 2வது வழித்தடம் அமைக்கப்பட்ட போது, பக்கிள் ஓடையில் உள்ள பாலத்தில் அடியில் மண், கற்கள் அடைபட்டு, சின்னக்கண்ணுபுரத்தில் இருந்து வழிந்தோடும் மழைநீர் சரியாக வடியாத நிலை இருந்தது. 


பக்கிள் ஓடையில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சீரமைக்கும் பணியை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

   உடன் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர இளைஞரணி அமைப்பாளர்  அருண்சுந்தர், துணை அமைப்பாளர் செல்வின், வட்டப்பிரதிநிதி பாஸ்கர், மற்றும் கருணா, மணி, அல்பட் உள்பட பலர் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக