▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂
7-8-2024
photo news by arunan journalist
‘சமூக வலைதளங்களில் பரப்பப்படும் போலி தகவல்கள் குறித்து உண்மை தரவுகள் பதிவிடப்படும்' - தமிழ்நாடு அரசு.
தமிழக அரசின் செய்தி சரிபார்ப்பகம் புதிய வாட்ஸ் அப் சேனல் !!!
தமிழக அரசின் சிறப்புத் திட்டம் செயலாக்கத்துறை, செய்தி மக்கள் தொடர்புத் துறை நடவடிக்கையாக....
தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகத்தின் வாட்ஸ் ஆப் சேனல் தொடக்கம்
செய்திகளின் உண்மைத்தன்மையை அறிய தமிழக அரசின் தகவல் சரிபார்க்கத்தின் புதிய வாட்ஸ் ஆப் சேனல் தொடக்கம்.
போட்டோ சாப் மற்றும் பொய் பிரச்சாரம் செய்யும் போலிகளை பொதுமக்கள் எளிதாக கண்டு அறிந்து விடலாம்!!!!
💥🌟✨💥🌟✨😝😝தவறான செய்திகளை தடுக்க புதிய வாட்ஸ்-அப் சேனல்... தமிழக அரசு புது முயற்சி
இது பற்றிய செய்தியாவது :-
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசின் சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கீழ் இயங்கும் தகவல் சரிபார்ப்பகம் தினமும் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வெறுப்புப் பிரசாரங்கள் மற்றும் போலி செய்திகளைக் கண்டறிந்து மக்களுக்கு உண்மையான தகவல்களைத் தரவுகளோடு பதிவிட்டு வருகிறது.
எனவே, சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளின் உண்மைத் தன்மையை அறிந்துகொள்ள புதிய வாட்ஸ்-அப் சேனல் தொடங்கப்பட்டுள்ளது.
அதில் உள்ள கியூ ஆர் கோட் குறியீட்டை ஸ்கேன் செய்து பின் தொடரலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக