▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂
8-8-2024
photo news by arunan journalist
தூத்துக்குடி மாநகராட்சியின் பொது மக்கள் குறை தீர்க்கும் முகாம் இன்று நடைபெற்றது
இது பற்றிய செய்தியாவது
தூத்துக்குடி மாநகராட்சி தூத்துக்குடி மாநகர பகுதிகளில் அரசின் பல்வேறு திட்டங்களின் வாயிலாக அடிப்படை கட்டமைப்பு வசதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
மேலும் பகுதி சபா கூட்டங்களும் உரிய காலங்களில் நடத்தப்பட்டு பொதுமக்களிடமிருந்து வரப்பெறும் கோரிக்கைகள் அனைத்தும் முறையாக பரிசீலிக்கப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கைகளை விரைந்து முடிக்கும் வகையில் ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை தோறும் மண்டலம் வாரியாக கோரிக்கைகளை கேட்டு அறிந்து உடனடியாக நிவர்த்தி செய்யும் வகையில் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் தொடர்புடைய அலுவலர்கள் மண்டல வாரியாக முகாம்களில் கலந்து கொண்டு பெறப்படும் மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக இன்று வியாழக்கிழமை (8.8.24) தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் வைத்து காலை 10.00 மணிக்கு வடக்கு மண்டலத்திற்குட்பட்ட ( வார்டு எண்கள் 1 முதல் 14 மற்றும் 20) ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
முகாமில் சொத்து வரி நிர்ணயம், சொத்துரி பெயர் மாற்றம், திருத்தங்கள், புதிய குடிநீர் இணைப்பு,தண்ணீர் கட்டண பெயர் மாற்றம், தண்ணீர் உபயோக கட்டண விகிதங்கள் மாற்றம், கட்டிட அனுமதி, ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், பொதுச் சுகாதாரம், உரிமை ஆணை கட்டணங்கள், தொழில்வரி, பாதாள சாக்கடை, பிறப்பு இறப்பு சான்று மற்றும் திருத்தங்கள் உள்ளிட்ட மாநகராட்சி சேவைகள் குறித்து கோரிக்கை மனுக்களை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பொதுமக்கள் மனுக்கள் பெற்றார். மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் சரவணன் மாநகராட்சி துனை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் மற்றும் மாநகராட்சி 1- லிருநது 14 மற்றும் 20 வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்
முகாமில் தூத்துக்குடி மாநகராட்சி ஆனையர்
ஆஃப் சென்ட்!!!!
பொது மக்கள் குறை தீர்க்கும் முகாமில் வழக்கமாக கலந்து கொள்ளும் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் இஆப ஏனோ? இந்த முகாமில் கலந்து கொள்ள வில்லை.
இவ்முகாமில்... பொதுமக்கள் தங்கள் தேவைகளை கோரிக்கை மனுக்களாக வழங்கினார்கள்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக