புதன், 7 ஆகஸ்ட், 2024

டிஜிட்டல் அதிமுக உறுப்பினர் அட்டை தூத்துக்குடியில்எஸ்.பி.சண்முகநாதன் வழங்கினார்

 தூத்துக்குடி தெற்கு மாவட்ட  அதிமுகவினருக்கு  டிஜிட்டல் வடிவிலான உறுப்பினர் அடையாள அட்டை விநியோகம். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் வழங்கி துவங்கி வைத்தார்.



இது பற்றிய செய்தியாவது:-

அதிமுக உறுப்பினர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய உறுப்பினர் அடையாள அட்டையை  அதிமுக தலைமை வழங்கி வருகிறது.  அதன்படி 2024ம் ஆண்டிற்கான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் புரட்சித் தலைவி அம்மா புரட்சித் தமிழர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் உருவம் பதித்த புதிய அடையாள அட்டையை டிஜிட்டல் முறையில் அறிமுகப்படுத்தி அந்த அடையாள அட்டைகளை அதிமுக மாவட்ட செயலாளர்களிடம் அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தலைமைக் கழகத்தில் வைத்து வழங்கி அதிமுக உறுப்பினர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை துவங்கிவைத்தார்.



 அதன்படி நேற்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட உறுப்பினர்களிடம் உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கும் பணியின் முதற்கட்டமாக நேற்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட அலுவலகத்தில் வைத்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் சம்மந்தப்பட்ட நிர்வாகிகளிடம் வழங்கி பணியை துவங்கிவைத்தார்.  அதனை மாவட்ட அவைத்தலைவர் வழக்கறிஞர் திருப்பாற்கடல் பெற்றுக்கொண்டார்.  

அப்போது அதிமுக அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, மாநில அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவரும், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள்  அணி செயலாளருமான இரா.சுதாகர், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் இரா.ஹென்றி, மாநில வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் தமிழநாடு புதுச்சேரி பார்கவுன்சில் மெம்பருமான பிரபு, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எம்.பெருமாள், தலைமைச் செயற்குழு உறுப்பினரும் மாவட்ட மகளிர் அணி செயலாளருமான நாசரேத் ஜூலியட், மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டேக் ராஜா, அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு மண்டலச் செயலாளர் கல்விக்குமார், மாவட்ட சிறுபாண்மையினர் அணி செயலாளர் கே.ஜெ.பிரபாகர்,  மாவட்ட இளைஞர் மற்றும இளம் பெண்கள் பாசறை செயலாளர் தனராஜ்,  ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் காசிராஜன்,  பகுதிக் கழக செயலாளர்கள் முன்னாள் துணை மேயர் சேவியர், முருகன், ஜெய்கணேஷ், நட்டார்முத்து, முன்னாள் கவுன்சிலர் சென்பகசெல்வன், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர்கள் திருச்சிற்றம்பலம், மனுவேல்ராஜ், வழக்கறிஞர்கள் சுகந்தன் ஆதித்தன், ஆன்ட்ருமணி, முனியசாமி, சரவணபெருமாள், ராஜ்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் சத்தியாலெட்சுமணன், துணைச் செயலாளர் மிக்கேல், தலைமைக் கழக பேச்சாளர் முருகானந்தம், சேவியர்ராஜ், உலகநாதபெருமாள், எஸ்.பி.பிரபாகர், பூர்ணசந்திரன், டைமன்ட்ராஜ், பொன்னம்பலம் மற்றும் பாலஜெயம், மாவட்ட அண்ணா ஆட்டோ தொழிற்சங்கச் செயலாளர் நிலா சந்திரன், சுந்தரேஸ்வரன், பரிபூர்ணராஜா, தளவாய், விக்கி, சகாயராஜா, உதயகுமார் அகியோர் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக