சனி, 10 ஆகஸ்ட், 2024

தூத்துக்குடி இளைஞர் அணிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுரை

  ▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 11-8-2024 

Photo news by sunmugasunthram Reporter

தூத்துக்குடி இளைஞர் அணிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.



இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி தமிழகம் முழுவதும் இளைஞர் அணியின் செயல்பாடுகள் குறித்து மாநிலம் வாாியாக சென்னையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுகவிற்குட்பட்ட தூத்துக்குடி மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர், துணை அமைப்பாளர்கள் ரவி, செல்வின், சங்கரநாராயணன், பிரவீன்குமார், ஆகியோாின் செயல்பாடுகள் குறித்து மாநில திமுக இளைஞர் அணி செயலாளரும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்க துறை அமைச்சருமான உதயநிதிஸ்டாலின் கலந்துரையாடல் நடைபெற்றது.


 அப்போது ...

 திமுக தலைமைக்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் உறுதுணையாக இருந்து கழகப்பணியை நல்லமுறையில் செய்திட வேண்டும்.

 தலைமை அறிவிக்கும் நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொண்டு கட்சியின் கொள்கைகளையும் நல்லாட்சியில் நடைபெறும் மக்கள் நலத்திட்டங்களையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்த்து திமுகவிற்கு வாக்கு வங்கியை அதிகரிக்க வேண்டும். 



ஏற்கனவே தலைவர் கூறிய படி 2026ல் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். 

இந்த இலக்கை தலைவர் நிர்ணயித்துள்ளார்.


 அதற்கு வலுசேர்க்கும் வகையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக தமிழகம்  எந்த கட்சிக்கும் வாய்ப்பளிக்காமல் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி முழுமையாக வெற்றி பெற்றதை போல் 234 தொகுதிகளிலும் முழுமையான வெற்றியை பெறுவதற்கு களப்பணியாற்றுங்கள்.

 


உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் நல்ல எதிர்காலம் நிச்சயம் அமையும் என்று கலந்துரையாடலின் போது அமைச்சர் உதயநிதிஸ்டாலின் பேசினார். 


மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் இன்பாரகு, மற்றும் செந்தில்குமார், உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக