ஞாயிறு, 26 மே, 2024

அன்பான முரட்டு பக்தன்

 ▂▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

26-5-2024

செய்தி புகைப்படங்கள் 

ரோஜா அருணன்  

"அன்பான முரட்டு பக்தன் !!       

          

                         ஏனைய மா.செ.க்கள் விவகாரத்தில் அப்படி நடந்திருக்க முடியாது என்றே தான் சொல்ல முடியும். 

அத்தனை எளிதில் தி.மு.க. இந்தளவிற்கு யாருக்காகவும் இறங்கி உருகி அஞ்சலி வாசித்திருக்காது.

அன்பான முரட்டு பக்தன் 


 அப்போது?

அதுவும் தி.மு.க.வின் செயல் தலைவர் ஸ்டாலினே, தனது அத்தனை அலுவல்களையும் விட்டுவிட்டு...

 தனது படை பலத்துடன் இரண்டு நாட்கள் தங்கி அஞ்சலி செலுத்திவிட்டு சென்றது தான் ஆச்சர்யமான விஷயம்.

 தி.மு.க.தலைமையே போற்றுமளவிற்கு என்ன தான் செய்தார் அந்த முரட்டு பக்தர்.?


     தி.மு.க. தலைமை வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், ” தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் – சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான என்.பெரியசாமி இன்று (26-5-2017) காலை 7.00 மணியளவில் சென்னை, தனியார் மருத்துவமனையில் மறைவெய்தினார்.

மறைவின் போது...


 அவரது மறைவினையொட்டி  மூன்று நாட்களுக்கு கழக அமைப்புகள் அனைத்தும் கழகக் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறும், கழகத்தின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒத்தி வைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அன்று இறுதி ஊர்வலத்தில்....




அந்தளவிற்கு கட்சியினருக்கு அவர் நெருக்கம். " 26 ஆண்டு கால நண்பரின் இழப்பு அதிர்ச்சியளித்தது.

 அவரது இழப்பு, தெற்கு சீமை தி.மு.க-வுக்கு பெரிய இழப்பு" என்கிறார் வைகோ.


      1979ல் வட்டச் செயலாரளாக தி.மு.க.வில் சாதாரண பொறுப்பிலிருந்தவர். பூர்வீகம் தட்டார் மடம் கிராமம். தன்பாடு உப்புத் தொழிலில் கூலி வேலையிலிருந்தவர். பின்பு அதன் தலைவரானார் 


தன் அயராத உழைப்பால், அரசியலிலும் தொழில் ரீதியாகவும் வளாந்தவர் பெரியசாமி. 1986லிருந்து தற்போது கட்சி ரீதியாக தூத்துக்குடி மாவட்டம், வடக்கு தெற்கு என்று பிரிக்கப்பட்டதில் வரை.. அப்போது தெற்கு மா.செ.வாக 31 வருடங்களாக மா.செ. பொறுப்பிலிருந்தவர் பெரியசாமி. 


கட்சியை விட்டு வைகோ 1993ல் பிரிந்து சென்ற இக்கட்டான கால கட்டத்தில் கட்சிக்கும் கலைஞருக்கும் உறுதுணையாக இருந்து கட்டுக் கோப்போடு கொண்டு சென்றவர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கட்சியை ஒரு இரும்புக் கோட்டையாக வைத்திருந்த பெரியசாமி ஒவ்வொரு தொண்டனையும் பெயர் சொல்லி அழைத்து உரிமை யுகடன் பணியாற்றும் வல்லமை பெற்றவர்.


    திமுக கட்சியின் தொண்டர்களும், மா.செ. பெரியசாமியை பெயர் சொல்லாமல் அண்ணாச்சி என்றே அன்புடன் அழைப்பார்கள் 


1986 மற்றும் 1996 கால கட்டத்தில் இரண்டு முறை தி.மு.க.வின் எம்.எல்.ஏ. 1979ல் ஆரம்பத்தில் தூத்துக்குடி கவுன்சிலர் பொறுப்பிலிருந்தவர். பின்பு தூத்துக்குடி நகராட்சி சேர்மன் பொறுப்பிற்கும் வந்தார். 

இவரது அழுத்தம் காரணமாக தூத்துக்குடியின் குடி தண்ணீருக்குத் தேவையான 2வது பைப் லைன் மற்றும் நகருக்கான பாதாளச் சாக்கடைத் திட்டமும் கொண்டு வரப்பட்டது. 


சேர்மன் மற்றும் மாநகராட்சி மேயரையும் உருவாக்கியவர்பெரியசாமி 

தி.மு.க.வின்  அமைச்சரும், தற்போதைய தூத்துக்குடி எம்.எல்.ஏ.வான கீதாஜீவன் இவரது மகள் ஆவார். 


இவரது மறைவு கட்சியின் தொண்டர்களும், கட்சி தாண்டிய நண்பர்கள் பிற கட்சித் தலைவர்களைக் கலங்கவைத்துள்ளது.


     " வேலையை அடுத்தவரிடம் கொடுத்து அழகுப்பார்ப்பதில்லை. எதுவாக இருந்தாலும் தானே முன்னின்று, ஒரு தொண்டனுக்கு என்ன தேவையோ.? அதை தானே முன்னின்று நடத்தி தருபவர் அண்ணாச்சி.!" என்கிறார்.

# போல்பேட்டை சிதம்பரகுமார். 


அடுத்து... 

புதுவருசம், பொங்கல் தினம் மென்றால் "பெரிசு அன்னாச்சி!!!"

வீட்டு முன்பு அவரை பார்த்து ஆசி

 பெற வே ஆயிரகணக்கான பேர்  நீண்டு வரிசையில் காத்து இருப்பர்

அவர்களுக்கு ரூபாய் 100,200, என வழங்குவார் எலுமிச்சை பழம் கொண்டு வந்து பார்த்தால் ரூபாய் 500 வழங்குவார்!!!

காலையில் இருந்து அவர் வீட்டுக்கு முன் நீண்ட வரிசையில் காத்திருந்து அண்ணாச்சியை பார்தது பணம் வாங்கி விட்டு தான் செல்வார்கள் அப் பகுதி வாசிகள்!!!


அதில் கட்சிகாரர்கள் மற்றும் பொதுமக்களை பார்த்து நலம்விசாரித்து  மகிழ்ச்சியோடு பணம் கொடுத்து அனுப்பி வைப்பார்.

தளபதி ஜெபஸ்டியான்
தூத்துக்குடி புது பஸ்ஸாடாண்ட்  பிள்ளையார் கோவில் அன்னதானம்  கச்சேரி என  அவர் கலக்குவார் என இனி எங்களுக்கு யார் செய்வாங்க? வியபாரிகளுக்கு உறுதுனையாய் இருந்தவர் என கலங்கி நிற்கிறார் தூத்துக்குடி புதுபஸ்ஸாடாண்ட்

வியாபாரி சங்க செயலாளர் தளபதி ஜெபஸ்டியான்.

தமிழக முதல்வர் ஸ்டாலின்!!!


இன்று தமிழக முதல்வர் இருக்கும் ஸ்டாலின் அன்று...

    திமுக கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலினோ, " 1960ம் வருடத்தில் இந்த பேரியக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட அண்ணன் தூத்துக்குடி பெரியசாமி வட்டக் கழகச் செயலாளர் முதல் தலைமைச் செயற்குழு உறுப்பினர் வரை கழகத்தினரின் செல்வாக்கைப் பெற்றும், தூத்துக்குடி நகர்மன்றத் தலைவர் முதல் சட்டமன்ற உறுப்பினர் வரை மக்கள் செல்வாக்கை பெற்றும், மதுராகோட்ஸ் பஞ்சாலை தொழிலாளர், ஸ்பின்னிங் மில் தொழிலாளர், உப்பு மற்றும் தலைசுமை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட 36 தொழிற்சங்கங்களின் தலைவராக இருந்து “தொழிலாளர் வர்க்கத்தின்” உரிமைகளுக்காகவும் வாதிட்ட பெருமைக்குரியவர். 


 30 வருடங்கள் கழகத்தின் மாவட்டச் செயலாளராக விளங்கிய அண்ணன் தூத்துக்குடி பெரியசாமி கழகத்திற்காகவும், மக்களுக்காகவும் வாழ்நாள் எல்லாம் பாடுபட்ட அவருக்கு “கலைஞர் விருது” வழங்கி சிறப்பிக்கப்பட்டார்.



 அவர் பிரிந்தாலும் அவரிடம் உள்ள “கழக உணர்வு” எப்போதும் தலைமுறை தலைமுறையாக நம்மிடையே தங்கி நிற்கும் என்று இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்." நெஞ்சம் நிறைந்த உணர்வில்.என்றார்.

அடுத்து.. தென் மாவட்டத்தை பொறுத்து வரை  பெரியசாமி

 அங்கே இருக்கிறார் எதையும்  சாதித்து விடுவார் என திமுக வில்  புதியவர்கள் வந்தும்  இறுமாப்பில் இருந்தது.


இப்போது மா.செ பெரியசாமி யின் இறப்பு  என்பது திமுக வுக்கு பேரிழப்பாக  பார்க்க படுகிறது

2024 மே26 இன்று அன்னாரது சமாதியில்...


.இதை எப்படி  யாரை கொண்டு ஈ்டுசெய்ய போகிறது திமுக என அனைவரும் எதிர்பார்ப்பில் இருந்தார்கள்.


அப்பாவின் மீது உள்ள அளப்பரிய பாசத்தால்..பெயரை மாற்றிய மகன் 

அவர் மறைவுக்குப் பின் அவரது மகனான ஜெகன் தனது பெயருடன் ஜெகன் பெரியசாமி என மாற்றியவர் தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்று ...

இன்று தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பெரியசாமி இருக்கிறார் 

முன்பு தந்தை பெரியசாமி தூத்துக்குடி நகராட்சி சேர்மன் ஆக பணியாற்றிய போது ..நகரில் தண்ணீர் தட்டுபாடு வராமல் தூத்துக்குடி நகர் வளர்ச்சிக்கு.... என்னென்ன அதிரடி செய்தாரோ அதைப் போல் செய்து வருகிறார் 

கிட்டத்தட்ட அப்பா வின் இடத்தை பிடித்து விட்டாரா... என கவர்ஸ்டோரி  பத்திரிகையாளர்கள்  விவாதித்து வருகிறார்கள். 



இரவு நேர ரவுண்ட்ஸ்!!!

இன்னும் நம்ப முடியாத கதை ஒன்றும் அப்பகுதியில்

ரவுண்ட் ஸ் வருகிறாராம் 

சும்மா சுற்றும் பசங்க பாத்து விரட்டி "டேய் நல்லா படியுங்க டா இந்தா காசு வச்சுக்கோ கொடுத்து விட்டு செல்கிறாராம்"....!!!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக