வெள்ளி, 1 மார்ச், 2024

தூத்துக்குடியில் முதல்வர் ஸ்டாலின் 71-வது பிறந்த நாள் 14-வது வார்டு திமுக வட்ட செயலாளர் காளி துரை தலைமையில் அப்பகுதியில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கல்

தூத்துக்குடியில் மாநகராட்சி 60 வார்டு பகுதிகள் முழுவதும் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் 71 வது பிறந்த நாள்   கொண்டாடப்பட்டது.



தூத்துக்குடி மாநகராட்சி 14-வது வார்டில் ஒலி பெருக்கி அமைத்து வியாபாரிகள்,ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் பொது மக்களுக்கு லட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.



தூத்துக்குடி 14 வது வார்டு சின்னகண்ணுபுரம் பத்திர காளி அம்மன் கோவில் அருகில் வட்ட செயலாளர் பா. காளி துரை தலைமையில் நடைபெற்றது.


இதில் இளைஞர் அணி செயலாளர் கண்ணன் மகளிர் அணி செயலாளர் கா.மாரி செல்வி வட்ட பிரதிநிதிகள் கோவிந்த ராஜ்,நடராஜன் மற்றும் ஜான்சன்,விக்னேஷ்,மோகன்,மாரி முத்து,லிங்கம் ஆகியோர் உடன் இருந்தார்கள்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக