வெள்ளி, 1 மார்ச், 2024

தூத்துக்குடி எம்.பி.வேட்பாளாராக எடப்பாடியார்? அதிமுக பரபரப்பு!!!

t░h░o░o░t░h░u░k░u░d░i░l░e░a░k░s░

1-3-2024

தூத்துக்குடி எம்.பி  வேட்பாளாராக எடப்பாடியார்? தூத்துக்குடி  தெற்கு மாவட்ட அதிமுகவினர் பரபரப்பு!!!



இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி நாடாளுமன்ற கடந்த தேர்தல் விவிஐபி வேட்பாளாராக  பி.ஜேபி  தமிழிசை சௌந்தராஜன், திமுக கனிமொழி நின்றனர் அதிமுக கூட்டணிக்காக அதிமுக நிற்காமல் தூத்துக்குடியை விட்டுவிட்டது.

இதனால் பிஜேபி தமிழிசை சௌந்தராஜன் படு தோல்வி!!!

வெற்றிபெற்ற கனிமொழி எம்பி ஆனார்

இந்த முறையும் திமுக தரப்பில் கனிமொழி எம்பி.யை நிறுத்த போகிறது.

 அதிமுக நிற்காமல் கடந்த முறை கோட்டை விட்ட தூத்துக்குடி  நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நின்று ஜெயிக்க வேண்டும்  

இதற்காக..

 தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி போட்டியிட முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் விருப்ப மனு செய்துள்ளார்.



 2024 நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி போட்டியிட 

வேண்டி தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் சார்பில்  சென்னை தலைமை கழகத்தில் மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ் விருப்ப மனு அளித்தார். 

உடன் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் சரவணபெருமாள் மற்றும் மாவட்ட செயலாளரின் நேர்முக உதவியாளர் சாம்ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக