திங்கள், 4 டிசம்பர், 2023

தூத்துக்குடியில் முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 7 வது ஆண்டு நினைவு தினம்

thoothukudileaks 5-12-2023

Photo news by 

arunan journalist 

அதிமுக கட்சி தலைவியும் முன்னாள் முதல்வர்  புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 7 வது ஆண்டு நினைவு தினம் தூத்துக்குடியில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 



இதுபற்றி செய்தியாவது

தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான சண்முகநாதன் தலைமையில்

 இன்று 05-12-2023 மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் 7-ம் ஆண்டு நினைவு நாள் அதிமுகவினரால் அனுசரிக்கப்பட்டது.


இதை முன்னிட்டு தூத்துக்குடி அதிமுக மாவட்ட  அலுவலகம் முன்பு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் அலங்கரிக்கப்பட்ட  திருஉருவப்படத்திற்கு தூத்துக்குடி அதிமுக மாவட்ட  செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் ஏராளமான அதிமுக வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்ட நிர்வாகிகள் மகளிர் அணியினர் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திருவுருவச் படத்திற்கு மாலை அணிவித்து ரோஜா பூ தூவி மரியாதை செலுத்தினார்

தமிழகம் முழுவதும் இன்று அதிமுக கட்சி தலைவியும் முன்னாள் முதல்வரான ஜெயலலிதா - வின் 7 ம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்க படுவதை முன்னிட்டு அதிமுகவினர் கறுப்பு பேட்ஜ் அணிந்து தங்கள் துக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக